அரசியல் கைதிகள் விடுதலை – பாதுகாப்பை அதிகரிக்க மஹிந்த கோரிக்கை

mahindaமுன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் அளவு போதாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதால் அவரது பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இவர்களை விடுவிப்பதாயின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள படையினரின் தொகையை அதிகரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மஹிந்த தவிர்த்து யுத்தத்துடன் தொடர்புடைய சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.

llபொலநறுவ மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.
நீர்த் தேக்கங்களும் குளங்களும் திறந்து விடப்பட்டுள்ளதால் அதற்கு அருகாமையில் வாழும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையத்தின் துனை இயக்குநர் பிரதீப் கொடிப்புலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நீர்த்தேக்கங்களும் குளங்களும் திற்ந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.
புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறிப்பிடுகின்ன.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை நீடிக்கும் என் தெரிவிக்கப்படுகின்து.

வங்கதேசத்தின் வடபகுதியில் இந்துக்குகள் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளன.

hindu_festivalநாட்டின் வடக்கேயுள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் நடைபெறும் மதத் திருவிழா காலத்தில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன.
இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பில், ஐவர் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றாலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் சுமார் 10 சதவீதம் உள்ளனர்.
அண்மைக் காலத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மை ஷியாப் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது இஸ்லாமியவாதிகள் தொடர்ச்சியாக கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவின் ரக்கா நகர் மீது கடும் வான் தாக்குதல்கள்  பிரிட்டனின் வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை:சிரிய அதிபர் அஸத்

raqqaசிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது.
இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ரக்கா நகரில் ஐ எஸ் அமைப்பினர் பலமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது ஆனால், பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி குரூப் எனும் மனித உரிமைகள் அமைப்போ, ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது.
இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் கூட்டுப் படைகள் நடத்தியதாகவும் அந்த அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் மீது பிரிட்டன் நடத்திய வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், இப்படியான வான் தாக்குதல்கள் ‘பயங்கரவாதப் புற்றுநோய்’ மேலும் அதிகரிக்கவே வழி செய்யும் எனக் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை, ரஷ்யா எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுள்ள அவர் இரண்டிலும் உள்ள மாறுதல்களையும் அப்பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
ஐ எஸ் அமைப்பின் மீது கடந்த செப்டம்பரில் ரஷ்ய சொந்தமாக வான் தாக்குதலை ஆரம்பித்தது.
ரஷ்ய எடுத்துவரும் நடவடிக்கை ஐரோப்பாவை காப்பாற்றுகிறது எனவும் அஸத் கூறுகிறார்.
அதிபர் அஸ்த் பதவியிலிந்து நீக்கப்படுவதையே பிரிட்டன் விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் தலையீடு அவருக்கான ஆதரவை மேலும் பலப்படுத்துவது போலத் பரந்துபட்ட அளவில் தெரிகிறது.