Header image alt text

காணோமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை-

missing_people_enquiry_jaffnaகாணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. குறித்த விசாரணை நடவடிக்கைகள் இம்மாதம் 11ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை வடக்கில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்ட செயலகத்தில் 11ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை இடம்பெறும் அமர்வில் நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும் 12ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் யாழ்.பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும் 13ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேசபைகளைச் சேர்ந்தவர்களும்,
Read more

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் ‪இரத்ததான முகாம்‬!! (படங்கள் இணைப்பு)

IMG_2834வவுனியா‬ பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் அவர்களது தலைமையில் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று முன்தினம் (05.12.2015) காலை 9.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெற்றது. ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பில் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இவ் இரத்ததான நிகழ்விற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் வைத்திய கலாநிதி ஹெடியாராச்சி,
Read more

பல்கலை அனுமதிக்கு முன் மாணவர்களுக்கு இரத்த பரிசோதனை-

rajithaபல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களையும் இரத்தப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த, எச்.ஐ.வி உள்ளிட்ட அனைத்து நோய்களையும் இனம்காண்பதே இதன் நோக்கம் என சுட்டிக்காட்டினார். தற்போது நாடு பூராகவும் 9வயதுக்கும் குறைவான எச்.ஐ.வி பாதிப்புள்ளவர்கள் 71பேர் இனம்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 20 பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாகவும், இதனை தவிர்க்க உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் எனவும், இதனால் எச்.ஐ.வி தவிர்த்து ஏனைய நோய்கள் தொடர்பிலும் அடையாளம் காண முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இணையும் முன் அனைத்து மாணவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் அவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எது எவ்வாறிருப்பினும் இந்த நடவடிக்கை எவ்வாறு, எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து ராஜித்த எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனை ஒரு யோசனையாகவே அவர் முன்வைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் உறவுகள், முகநூல் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்-வட்டு இந்து வாலிபர் சங்கம்

ymvaபுலம்பெயர் உறவான (பிரான்ஸ்) சங்கரத்தையை சேர்ந்த ச.கிருபாகரன் அவர்கள் தனது முதலாம் ஆண்டு திருமண நாள் நிறைவினை முன்னிட்டு வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தை இருவரையும் இழந்தும் கடந்த புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி ராகவி அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக மாதந்தம் 3000 ரூபாவினை இன்றிலிருந்து வழங்கி வருகின்றார்.

இவ் சமூக சிந்தனையுள்ள கிருபாவிற்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் இனிய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்று எமது சங்கத்தின் ஊடாக கல்விக்கான, வாழ்வாதார, மருத்துவ மற்றும் இல்லங்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற எமது வட்டுக்கோட்டை மக்கள், எமது அன்பான உறவுகளிடம் நாம் கேட்டுக்கொள்ளும் விடயம் யாதெனில் வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும் தமது கல்வியை தொடர்வதற்கு பாடசாலைக்கு 7,8 கிலோமீற்றர் தூரம் பற்றைக்காடுகளை தாண்டி துவிச்சக்கர வண்டிகள் இல்லாது நடந்து செல்ல வேண்டிய கடினமான சூழ்நிலை, தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்கான வசதிகள் இன்மை மற்றும் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்கான வசதிகள் இன்மை போன்ற பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  Read more

இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை இணையத்தில் வழங்க ஏற்பாடு-

briberyசரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தெளிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விஷேடமாக வடக்கிலுள்ள மக்கள் இலஞ்சம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயக்கம் காட்டுவதாக கூறிய ஆணைக்குழு, அவர்கள் இது குறித்து சரியான புரிந்துணர்வின்றி செயற்படுவதாக கூறியுள்ளது. மேலும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இணையத்தின் மூலம் முறைப்பாடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது

இலஞ்ச வழக்கு: ஒருவருக்கு பிணை மற்றவர் விளக்கமறியலில்-

courts25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நாரஹேன்பிட பொலிஸ் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சந்தேகநபரை 15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்க, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாரஹேன்பிட முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 11ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்றையதினம் குறித்த வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமரப்பிக்க வேண்டும் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்குத் தாக்கல் செய்யாமல் இருக்க வைத்தியர் ஒருவரிடம் 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் பெற்றதாக இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிலாவெளியில் கரையொதுங்கிய ஆணின் சடலம்-

dead.bodyதிருகோணமலை நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சடலம் நேற்று முற்பகல் கரையொதுங்கியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், எனினும் இதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாதெனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். நிலாவெளி பகுதியில் கரையொதுங்கிய சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, திருகோணமலை கடற்பரப்பில் சுமார் 20 மைல் தூரத்தில் ஆறு சடலங்கள் மிதப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று கடற்படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். திருகோணமலை துறைமுகப் பொலிஸார் வழங்கிய தகவலின்படி இரு படகுகள் குறித்த பகுதிக்கு சென்றதாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

யாழில் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் புதுப்பிப்பு-

909யாழில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் நோக்கிலும் மீண்டும் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.வூட்லர் தலைமையில் இக்கண்காணிப்பு நிலையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தின் இதற்கு முன்னரும் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையின் பின்னரான வன்முறைச் சம்பவங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் இக்கண்காணிப்பு நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்தும் யாழில் பல குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்ற நிலையில், அவற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் நால்வர் காயம்-

dfdfகிளிநொச்சி இரணைமடு சந்தியில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து நோயாளர்களை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்ற இராணுவ அம்புலன்ஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்புலன்ஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.