தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் இரத்ததான முகாம்!! (படங்கள் இணைப்பு)
வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் அவர்களது தலைமையில் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று முன்தினம் (05.12.2015) காலை 9.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெற்றது. ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பில் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்விற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் வைத்திய கலாநிதி ஹெடியாராச்சி,
ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி.அனுசியா, தாதியர்கள், ஊழியர்கள், ஓமந்தை மத்திய கல்லூரி ஆரியர்களான திரு.சந்திரமோகன், திரு.தர்ஷன், திரு.கஞ்சுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், கழகத்தின் உறுப்பினர்களான கஜீபன், முகுந்தன், சுஜீபன், கோகுலதாசன், ரூபதரன்,நிலக்சன், மற்றும் பல குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இளைஞர் கழகமானது இலங்கையின் பல பாகங்களில் தமிழர்களது சமூக, கலை, கலாசார, கல்வி அபிவிருத்திகளில் ஈடுபட்டு இருக்கும் அதே வேளையில் தொடர்ந்து நாடு பூராகவும் 03வது தடவையாக இரத்ததான முகாமை வெற்றிகரமாக நடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.