காணோமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை-

missing_people_enquiry_jaffnaகாணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. குறித்த விசாரணை நடவடிக்கைகள் இம்மாதம் 11ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை வடக்கில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்ட செயலகத்தில் 11ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை இடம்பெறும் அமர்வில் நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும் 12ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் யாழ்.பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும் 13ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேசபைகளைச் சேர்ந்தவர்களும்,
14ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் வடமராட்சி வடக்கு பிரதேச சபையை சேர்ந்தவர்களும் 15ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் உடுவில் மற்றும் தெல்லிப்பளை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.