புலம்பெயர் உறவுகள், முகநூல் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்-வட்டு இந்து வாலிபர் சங்கம்

ymvaபுலம்பெயர் உறவான (பிரான்ஸ்) சங்கரத்தையை சேர்ந்த ச.கிருபாகரன் அவர்கள் தனது முதலாம் ஆண்டு திருமண நாள் நிறைவினை முன்னிட்டு வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தை இருவரையும் இழந்தும் கடந்த புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி ராகவி அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக மாதந்தம் 3000 ரூபாவினை இன்றிலிருந்து வழங்கி வருகின்றார்.

இவ் சமூக சிந்தனையுள்ள கிருபாவிற்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் இனிய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்று எமது சங்கத்தின் ஊடாக கல்விக்கான, வாழ்வாதார, மருத்துவ மற்றும் இல்லங்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற எமது வட்டுக்கோட்டை மக்கள், எமது அன்பான உறவுகளிடம் நாம் கேட்டுக்கொள்ளும் விடயம் யாதெனில் வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும் தமது கல்வியை தொடர்வதற்கு பாடசாலைக்கு 7,8 கிலோமீற்றர் தூரம் பற்றைக்காடுகளை தாண்டி துவிச்சக்கர வண்டிகள் இல்லாது நடந்து செல்ல வேண்டிய கடினமான சூழ்நிலை, தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்கான வசதிகள் இன்மை மற்றும் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்கான வசதிகள் இன்மை போன்ற பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனுடன் வன்னியில் பல்கலைக்கழகத்திற்கு ஏன் தெரிவாகினோம் என்று வறுமையின் காரணமாக ஏங்கிய நிலையில் உள்ளனார். இது மட்டுமல்லாது பல பல்கலைக்கழக மாணவர்கள் மாத இறுதியில் தமது மூன்று வேளை உணவிணை பெற்றுக்கொள்வதற்காக கூலி வேளைக்குச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலையினை எதிர்நோக்கி வருகின்றதனை நாம் அறிவோம். இவர்களின் கல்வியை தொடர்வதற்கான கோரிக்கைகள் எமக்கு நாளாந்தம் வந்தவண்ணம் உள்ளன ஆனால் அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு எம்மிடம் போதிய நிதி வளம் இன்மையினால் இதனை மேற்கொள்ள முடியாதுள்ளமை எமக்கு மன வேதனையாக உள்ளது. 

இருப்பினும் இது தொடர்பான பல கோரிக்கைகளை அரசியல் பிரதிநிதிகளிடம் நாம் முன்வைத்த போதும் அவர்களிடமிருந்து எந்தவிதமான பூரண ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்பதை மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். கிருபாவினைப் போன்று உங்களின் திருமண நாள் போன்ற தினங்களுக்கு கல்;வியில் ஆர்வம் உள்ள யுத்தத்தின் பாதிப்பினால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் போன்ற பல பிள்ளைகள் இன்று கல்வியினை தொடர்வதில் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர் அவர்களில் ஒருவருக்கு உங்களின் பிறந்தநாள் நிகழ்வுகள்;, திருமணநாள் நிகழ்வுகள் மற்றும் நினைவு தினங்கள் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மாதாந்தம் குறைந்தது 2000 ரூபா வீதம் வழங்கி வந்தால் எமது இளைய சமூகத்தின் பலரை கல்வியின் மூலம் வளர்த்தெடுக்க முடியும் என்பது உண்மை.

எமது தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பணம் ஓர் தடையாக இருக்குமெனின் அது எமது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கே இழுக்காகிவிடும். இன் நிலைமை தொடருமேயானால் வன்னி பிரதேசத்தில் பாரிய கல்வியாளர்களை இழக்க நேரிடும் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியை தொடர முடியாமல் உள்ள மாணவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கையை மேற்;கொள்ள வேண்டும் என்பதனை எமது புலம்பெயர் உறவுகளுக்கும் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் பணிவாக தெரிவித்துக்கொள்கின்றோம். இவ் கருத்துக்கள் எல்லாம் எமது மக்கள் சார் பிரச்சனைகளினதும் தேவைகளினதும் அடிப்படையிலான அன்பான கோரிக்கைகளாக முன்வைக்கின்றோம்.
(வட்டு இந்து வாலிபர் சங்கம்)