Header image alt text

யுத்தப் பாதிப்புக்கு உள்ளானோர்க்கு ஐரோப்பிய ஒன்றியம் வீடமைப்பு-

europeanஇலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள் குடியேறிவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக 14 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மீள் குடியேறியவர்களின் சமுதாயங்களின் வாழ்க்கை நிலைமைகள் சமூக ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 9 பிரதேசங்களில் வீடமைப்பு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது அத்துடன் 60 கிராமங்களைச் சேர்ந்த 60,000 பேருக்கு தொழில்கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி உள்ளிட்ட பயிற்சிகளுடன் அனர்த்த முன்னாயத்த பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது இந்த திட்டங்கள் மக்களின் வாழ்வில் நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவுவதுடன் கடன் வசதிகள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரணி-

president and primeஇலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற கலாச்சாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்டமாக சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு நாளைமாலை 03.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசிய நிகழ்வு மற்றும் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சர்வதேச ஊழல் எதிர்ப்பு பேரணி மாலை 3மணியளவில் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமாகி சுதந்திர சதுக்கம் வரை சென்று, அங்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Read more

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மாட்டோம்-குடும்ப உறவுகள்-

missingயாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். தங்கள் முடிவு தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘காணாமற்போனோரை கண்டறிவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 2013ஆம் ஆண்டு மகஸ்வெல் பரணகம தலைமையில் மேற்படி ஆணைக்குழுவை உருவாக்கினார். வேறுவழியின்றி காணாமற்போன எமது உறவுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆணைக்குழுவின் முன் நாங்கள் சாட்சியமளித்திருந்தோம். Read more

அவன்ற் கார்ட் தலைவருக்கு அழைப்பு, பொன்சேகா ஆணைக்குழுவில் முறைப்பாடு-

nisanga fonsekaஅவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மூவர் முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்யவே நிஸ்ஸங்க இன்றுபகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்றுபகல் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அவன்ட் காட் நிறுவனத் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சரத் பொன் சேகாவுக்கு நிதி வழங்கியதாக தெரிவித்திருந்த நிலையில், பொன்சேகா அதை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு சென்னை விமான சேவை மீள ஆரம்பம்-

special flightசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்று பிற்பகல் 1.45 அளவில் யு.எல்.127 எனும் விமானம் சென்னை நோக்கி பயணித்துள்ளது. இதேவேளை யு.எல் 128 என்ற விமானம் இன்று பிற்பகல் 4.05 அளவில் சென்னையில் இருந்து இலங்கை நோக்கி பயணிக்குமெனவும் பிற்பகல் 5.25 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் எனவும் ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இதேவேளை புதுடில்லியில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ஸ்ரீ லங்கன் வானூர்தி சேவையின் விசேட வானூர்தி ஒன்று இன்று முற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளது. சுமார் 305 பேர் புதுடில்லியில் தங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நேற்று சென்னையில் இருந்தும் பல இலங்கை பயணிகள் விசேட வானூர்தி மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்து சிறுவனைக் காணவில்லை, கோட்டையில் குழந்தை மீட்பு-

dfgfவவனியா சிறுவர் இல்லமொன்றில் இருந்த சிறுவனொருவனைக் காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு நிலையத்தால் சேர்க்கப்பட்ட சிறுவனே, கடந்த 5ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை ஒன்றரை வயதான ஆண் குழந்தையொன்று கோட்டை பகுதியின் வீதியோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்தக் குழந்தை சிறுவர் இல்லமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார் மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட குழந்தை பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை கடற்பரப்பில் சடலங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுப்பு-

trincoதிருகோணமலை கடற்பரப்பில் சடலங்கள் சில மிதப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மூன்று டோரா படகுகளும் திருமலை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். திருமலையிலிருந்து 20 கடல் மைல் தூரத்தில் ஆறு சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன இதேவேளை இது வரையில் எவ்வித சடலமும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-

rainதொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. கண்டி பகுதியில் தொடரும் சீரற்ற காலனிலை காரணமாக இரங்கல் நகரில் இருந்து கிரண்டியல்ல கீழ் பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் காணப்படும் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழந்துள்ளது. இதன் காரணமாக இந்த வீதியூடான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடரும் மழையுடனான காலனிலையால் பாலத்தின் ஏனைய பகுதிகளில் அதிக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் ஆனந்தபுரம் கிழக்கு பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.