யுத்தப் பாதிப்புக்கு உள்ளானோர்க்கு ஐரோப்பிய ஒன்றியம் வீடமைப்பு-

europeanஇலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள் குடியேறிவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக 14 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மீள் குடியேறியவர்களின் சமுதாயங்களின் வாழ்க்கை நிலைமைகள் சமூக ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 9 பிரதேசங்களில் வீடமைப்பு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது அத்துடன் 60 கிராமங்களைச் சேர்ந்த 60,000 பேருக்கு தொழில்கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி உள்ளிட்ட பயிற்சிகளுடன் அனர்த்த முன்னாயத்த பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது இந்த திட்டங்கள் மக்களின் வாழ்வில் நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவுவதுடன் கடன் வசதிகள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கடன் திட்டம் மூலம் 16,000 பேருக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வறுமையை போக்க தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.