குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 (படங்கள் இணைப்பு)-
யாழ். குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத் தலைவர் திரு. செ.நவரத்தினராசா அவர்களது தலைமையில் குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டியத்தொகுதியில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திரு. நந்தகோபாலன் (பிரதேச செயலாளர், வலி தெற்கு, உடுவில்), திரு. கு.சுரேஸ்குமார் (கணக்காளர், கமநல அபிவிருத்தி திணைக்களம் யாழ்ப்பாணம்), திரு. நா.பஞ்சலிங்கம் (மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, யாழ்ப்பாணம்) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக திரு. பி.மயூரதன் (கிராம சேவையாளர், குப்பிழான் தெற்கு ஜே-210),, திரு. என்.நவசாந்தன் (கிராம சேவையாளர், குப்பிழான் வடக்கு ஜே-211), திருமதி அமிர்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே-210), ப.மீனலோஜினி (வி.போதனாசிரியர் உடுவில்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், உருளைக்கிழங்கு விவசாயம் இங்கு உடுவில், கோப்பாய் பிரதேச செலயகங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு வரையறைக்குள்தான் நடைபெறுகின்றது. அதாவது உருளைக்கிழக்கின் உற்பத்திச் செலவு மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஆகவே விதைகிழக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான சில மானியங்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றேன். ஏனென்றால் இங்கு உற்பத்தியாகின்ற கிழக்குகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கிழக்குகளுடன் போட்டிபோட்டு விற்கமுடியாத நிலைமை இருக்கின்றது. ஆகவே உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும்.
அறுவடை நேரத்தில் வரியை அதிகரிக்க வேண்டும் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையில் சதொச போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் இந்தக் கிழக்கினை பெறவேண்டும். இவ்வாறாக இந்த விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமே உருளைக்கிழங்கு விவசாயத்தை வடக்கிலே சிறிதுசிறிதாக முன்னெடுத்து பாரியளவிலே செய்யக்கூடிய நிலை உருவாகும். இதற்காக அரசாங்கத்திலே விவசாய அமைச்சருடன் பேசி உருளைக்கிழக்கு விவசாயத்திற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடியற்சி எடுப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது குப்பிழான் வடக்கு ஜே-211, குப்பிழான் தெற்கு ஜே-210 பிரிவுகளிலிருந்து கிராம சேவையாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு சிங்கப்பூர் க.கிருஸ்ணர் அவர்களின் அனுசரணையில் இடம்பெற்றது.