வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சைவ ஆலோசனைச் சபையின் சிவநெறி இறுவட்டு மற்றும் கரகம் ஆவணப்படம் வெளியீட்டு விழா-(படங்கள் இணைப்பு)

20151211_102346_resizedயாழ். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சைவ ஆலோசனைச் சபையின் சிவநெறி இறுவட்டு-04 மற்றும் கரகம் ஆவணப்படம் வெளியீட்டு விழா கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுமுற்பகல் 10மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

திரு. ச.சிவஸ்ரீ (பிரதேச செயலாளர், தலைவர், சைவ ஆலோசனைச் சபை, பிரதேச செயலகம் கரவெட்டி) அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. பா. சேந்தில்நந்தனன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் மற்றும் திரு. சிவயோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முத்தமிழ் குருமணி சகலாகமசங்கிரகா சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் (ஸ்ரீகதிரமலை சிவன் தேவஸ்தானம், சுன்னாகம்), பிரம்மஸ்ரீ பூரண. சுதாகரக்குருக்கள் (பிரதமகுரு கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயம், கரவெட்டி) ஆகியோர் ஆசியுரையினை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் சிவநெறி இறுவட்டும், கரகம் ஆவணப்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

20151211_102346_resized20151211_102408_resized 20151211_102956_resized 20151211_110115_resized 20151211_110350_resized 20151211_112244_resized 20151211_112444_resized 20151211_115512_resized 20151211_115600_resized 20151211_115840_resized 20151211_120814_resized 20151211_120936_resized