உடுவில் பிரதேச செயலகத்தினால் விதை உருளைக்கிழங்கு விநியோகம்-(படங்கள் இணைப்பு)
யாழ். வலி தெற்கு, உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் ஏற்பாட்டில் உடுவில் பிரதேச செயலகத்தினால் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உருளைக்கிழங்கு விதை வழங்கும் நிகழ்வு நேற்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உருளைக்கிழங்கு விதையினை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் விவசாயபீட விரிவுரையாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.