ஏழாலை சைவசன்மார்க்க முன்பள்ளியின் புதிய கட்டிடத் திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)
யாழ். ஏழாலை சைவசன்மார்க்க முன்பள்ளியின் புதிய கட்டிடத் திறப்புவிழா இன்றுகாலை முன்பள்ளி நிர்வாகசபைத் தலைவர் திருமதி மல்லிகா ஆசிரியை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. எஸ்.நந்தகோபாலன் (வலிதெற்கு, உடுவில் பிரதேச செயலாளர்), வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக சமய ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முன்பள்ளியின் புதிய கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப் புதிய முன்பள்ளிக் கட்டிடத்திற்காக கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது வட மாகாணசபை நிதியிலிருந்து ஒருதொகைப் பணத்தினை வழங்கியிருந்தார். மேற்படி கல்விக் கோட்டத்தில் இரண்டாவது ஆகக்கூடிய பிள்ளைகள் கல்வி பயில்கின்ற இடமாக இந்த முன்பள்ளி திகழ்கின்றமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இந்நிகழ்வில் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.