தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ் கிளையின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

20151212_174445_resizedதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ். மாவட்டக் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான (வர்ண இரவு) என்னும் கௌரவிப்பு விழா இன்றுபிற்பகல் நடைபெற்றது. மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இளைஞர் யுவதிகள் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார்கள். யாழ். லக்சுமி மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திரு. சுபராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. பா.கஜதீபன், திரு. சுகிர்தன், திரு. ஆனோல்ட், ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது இளைஞர் யுவதிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்டத்திலான பணிப்பாளர்களும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் கிளையைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

20151212_174445_resized20151212_174544_resized 20151212_174605_resized 20151212_174611_resized 20151212_174621_resized 20151212_174707_resized 20151212_174751_resized 20151212_174803_resized 20151212_174816_resized 20151212_175056_resized 20151212_175127_resized 20151212_175444_resized 20151212_175728_resized 20151212_175910_resized 20151212_181124_resized 20151212_182736_resized 20151212_184415_resized 20151212_184525_resized 20151212_184656_resized 20151212_193544_resized
20151212_194350_resized
20151212_194651_resized 20151212_194858_resized 20151212_195121_resized 20151212_195156_resized 20151212_195448_resized 20151212_200613_resized