முன்னாள் போராளிகள் மற்றும் உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி- (படங்கள் இணைப்பு)
வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் திரு. பா. டெனீஸ்வரன் அவர்களினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. மேற்படி உதவித் திட்டத்தின்கீழ் குடும்பம் ஒன்றிற்கு தலா 50,000 (ஐம்பதினாயிரம்) ரூபா வீதம் 137 குடும்பங்களுக்கு மேற்படி நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்: திரு. பா.டெனீஸ்வரன் அவர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன்(பவன்), திரு. துரைராசா ரவிகரன் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தை, கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.