தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இலங்கை அகதிகளின் சில முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி முகாமில் 200க்கும் அதிகமான வீடுகள் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் சிவகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்தவந்த இந்த முகாம் வீடுகள், மழை வெள்ளத்தில் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அகதிகளுக்கு அரசு வழங்கிவருகின்ற உதவித் தொகைகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இந்த வீடுகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்துவந்ததாகவும் சிவகுமார் கூறினார். Read more