வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களது தேவைகள் குறித்து ஆராய்வு-(படங்கள் இணைப்பு)
அண்மையில் வவுனியாவில் பெய்த கடும்மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் பாதிக்கப்பட்ட கிராமங்களான புதிய கற்குளம், பழைய கற்குளம், சிதம்பரபுரம் மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்களை வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா, வட மாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மக்களின் உடனடி தேவைகள், அனர்த்தத்தால் எற்பட்ட சேதங்கள், கிராமங்களின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இவ் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.