யாழ் பல்கலைக்கழக விழிப்புலணற்ற 11 மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்புகள்-(படங்கள் இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் இயற்கையாக விழிப்புலனற்ற மாணவர்கள் தமது விரிவுரைகளின் போது ஒலிப்பதிவு செய்து பின்னர் அதனை குறிப்பு எடுத்து கற்றுக்கொள்வதற்கு ஒலிப்பதிவு கருவி இல்லாது பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனார் இவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக ஒலிப்பதிவு கருவிகளை தந்துதவுமாறு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட விழிப்புலணற்ற மாணவர்களினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அமைவாக இன்று வட்டு இந்து வாலிபர் சங்க தலைமைச் செயலகத்தில் சங்கத்தின் செயளாளர் இ.தக்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு தலா 8.250 ரூபா பெறுமதியான 11 ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் 10000 ரூபா பெறுமதியான ஒரு துவிச்சக்கர வண்டி என்பன வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் திரு.வள்ளிபுரம் (பிரதிநிதி ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியம் லண்டன்) வட்டுக்கோட்டை இலங்கை வங்கி முகாமையாளர் திரு.வே.புவனேந்திரராஜா அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அதிபர் திரு.ந.சபாரட்ணசிங்கி (சங்க போசகர்) சங்க அங்கத்தவர்கள் மற்றும் விழிப்புலணற்ற யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ் ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிக்கான நிதி அன்பளிப்பினை லண்டனைச் சேர்ந்த ஒம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மாணவர்களிகன் சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். மேலும் வட்டு இந்து வாலிபர் சங்கத்துடன் இணைந்து பல மனிதாபிமான செயற்றிடங்களை ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்)