பேரவையின் தீர்வுத் திட்டங்களை ஆராய உபகுழு நியமனம்-(படங்கள் இணைப்பு)

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி பி. லக்ஸ்மன் தெரிவித்;துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன் முடிவில் இடமபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த மக்கள் பேரவையானது அடுத்த கட்டதை நோக்கி செல்லவேண்டி உள்ளது. அதனடிப்படையில் தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உப குழு ஒன்று நியமிக்கபட்டுள்ளது. இக்கழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐந்து அங்கத்தவர்களை கொண்ட வெளிநாட்டு நிபுணர் குழு இணைக்கப்படவுள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சபையில் முன்வைக்கப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளபட்ட பின்னர் மக்களிடம் வெளிப்படுத்தப்படும்.
இந்த அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றம் பெறுவதற்கான சந்தர்ப்பமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. எமது தேவை அதுவல்ல. பாதிக்கப்பட்டவர்கள் நாம் எமது மக்களின் உழைப்புக்கள், தியாகங்கள், உயிரிழப்புக்கள் வீணாகிவிடக்கூடாது. எமது பிரச்சினைகள் அனைத்தையும் நாம் அரசியல்வாதிகளிடம் விட்டுவிட முடியாது. எமக்கான தீர்வை நோக்கிய செயற்பாடுகளை நாம்தான் செய்யவேண்டும். இது முழுக்க முழுக்க தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதாக தான் இருக்கும். தயவு செய்து இந்த அமைப்பிற்கு யாரும் அரசியல் சாயம்பூசாதீர்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

hghgh fdf dfgfg sfdfdf