முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவுநாள் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2004ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஆறாம்கட்டை கயட்டைப் பகுதியில் நேற்று ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. சுனாமியில் மரணித்தோரது உறவினர்களுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா, அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. அன்ரனி ஜெகநாதன், திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. துரைராசா ரவிகரன், வன்னி மேம்பாட்டுக்கழக தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், பங்குத் தந்தை, அருட் சகோதர்கள், அருட் சகோதரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டு நினைவுச் சுடர்களை ஏற்றி மலர்துவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.