பேரவையின் ஊடாக நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு-வடமாகாண முதலமைச்சர்-

cv vதமிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற வாய்ப்புகள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தழிழ் மக்களுடைய கரிசனைகள் பல இருக்கின்றது. வருங்காலத்தில் தழிழ் மக்களுடைய காலம் எவ்வாறு அமைய வேண்டும். எமது பாரம்பரியத்தில் பண்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது. அதற்கு அமைவாக அரசியல் யாப்பு அமைப்பு தொடர்பிலும் எங்களுக்கு கரிசனை இருக்கின்றது. வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை யெனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அதனால் இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தழிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து வெளியீடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தழிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் எமது கட்சியின் ஊடாக இது தொடர்பாக தெரியப்படுத்தலாம். பல எதிர்ப்புகளை தாண்டுவது தான் ஐனநாயகம். எங்களுடைய மாறான கருத்துக்களை மற்றவர்கள் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதில் அவர்களை எதிரிகளாக நினைப்பது தவறு.
இது தழிழ் மக்களுடைய இயக்கம். இதில் எத்தனை பேரும் சேர்ந்து முன்வரவேண்டி எடுக்கப்பட்டுள்ள ஒரு விடயம். இந்த விடயத்திலே சகலருடைய ஒத்துழைப்பும் தேவை. ஆகையினால் அவர்களை தனித்து விடவோ?, வேண்டாம் என்று சொல்லவோ? நாம் தழிழ் மக்கள் பேரவை கோரவில்லை. அதனால் தழிழ் மக்களுடைய நலன் கருதி எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்போம். இந்த கோட்பாடுக்கு இணங்க இவ் அமைப்பின் ஊடாக சேர்ந்து கைகோர்க்கும் அனைவரையும் ஒன்றினைத்து புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற அனைவரும் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்தார்..

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை எற்றுக் கொள்ளப்பட்டவர் வரமுடியும் என்று குறிப்பிட்டோம். அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். இதில் சுமந்திரன் வரவேண்டும் என்று கூறினால் அவரையும் வரச் சொல்லுவோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எங்களுக்கான கொள்கைகள் இருக்கின்றன. தழிழ் மக்களுடைய எதிர்கால சிந்தனையிருக்கின்றன. அதே சிந்தனையில் இருப்பவர்கள் இந்த பேரவையில் வந்திருக்கின்றார்கள். அதே சிந்தனையில் வேறுபல அரசியலாளர்கள் வைத்திருந்தால் வந்து சேருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார்.

அரசியல் யாப்பு யாக்கும்போது தழிழ் மக்களுக்கான உத்தரவாதங்கள், அவற்றிக்கான பாதுகாப்புகள், புரிந்துகொள்ள வேண்டும் தெரிந்து கொள்ளவேண்டும். மக்கள் இடையில் இருந்து நிலத்தில் இருந்து ஒன்று சேர்ந்து அவர்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கும் வண்ணமாக நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்து இப்படியாக செயற்பாடுகளை பெறும் விதமாக அந்த புதிய அரசியல் யாப்பு இருக்கவேண்டும் என்ற நோக்கில் இதனை முன்னேடுத்தோம். அதற்கு இப்பேரவை அனுசரணையாக உள்ளது. அரசாங்கம் என்பது புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவது உண்மை அதில் தழிழ் மக்களுடைய பிரச்சனைகள் எந்தவகையில் என்பது தான் இன்றை எமது பேரவையின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

பலர் தொடர்புகளை எற்படுத்தி கொண்டு மக்களிடையே எழுச்சி வரவேண்டும், மக்களுடைய பிரச்சனையில் தீர்க்கப்படவேண்டும்.என்று கோருகின்றனர். அதனால் இந்த தழிழ் மக்கள் பேரவையினை விரிவுபடுத்தி மக்களுடைய பலமான ஒரு இயக்கமாக மாற்றவேண்டிய நிலைப்பாடு எமக்கு இருக்கின்றது. அவ்வாறான பலம் இருந்தால் தான் அரசாங்கமும் கவனத்தில் எடுக்கும் என வடமாகாண முதலைமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.