தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 03வது பொதுக்கூட்டம்-(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 03வது பொதுக்கூட்டம் கழகத்தின் தலைவர் திரு.சு.காண்டீபன் தலைமையில் நேற்று 27.12.2015 ‘வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கழகத்தின் உறுப்பினர்களின் செயற்றிறனின்பால் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கௌரவ நா.கமலதாசன் அவர்களுடன் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற அதிபர் திரு.பரஞ்சோதி, வேப்பங்குளம் பிள்ளையார் தேவஸ்தானத்தின் மதிப்பிற்குரிய மதகுரு கஜேந்திர ஷர்மா,இளைஞர் சேவைகள் அதிகாரி அஜித் சந்திரசேன, இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் திரு.அமுதவாணன், இளைஞர் கழக மாவட்ட சம்மேளன பொருளாளர் முகிலன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், ஆசிரியர் சந்திரமோகன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், புதிதாக கழகத்தில் இணைந்த உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான பொதுக்கூட்டம் தொடர்ந்து மதிப்பிற்குரிய மதகுரு கஜேந்திர ஷர்மா அவர்களின் ஆசியுரையுடன் தொடர்ந்தது. தலைமையுரையினை கழகத்தின் தலைவர் நிகழ்த்திய பின்னர் சென்ற பொதுக்கூட்ட அறிக்கை செயலாளரினால் வாசிக்கப்படதுடன் கடந்த ஆண்டில் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபைக்கான தெரிவு இடம்பெற்று சபையின் ஏகமனதான ஆதரவுடன் புதிய நிர்வகா உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து அடுத்த நிர்வாக ஆண்டில் மேற்கொள்ளவுள்ள புதிய திட்டங்கள், செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று செயலாளரின் நன்றி உரையுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.