அவன்ட் கார்ட் குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு-

evangardஅவன்ட் கார்ட் ஆயுத கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2மாதங்களுக்கு முன்னதாக காலி கடற்பரப்பிற்கு 12கடல்மைல் தொலைவில் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பலொன்று மீட்கப்பட்டது. இந்த ஆயுதக் கப்பல் குறித்து இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த இரு தரப்பின் விசாரணைகளின் அறிக்கைகள் தயாராக இருப்பதாகவும் விரைவில் அவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது. அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக போலியான தகவல்களை வழங்கியிருந்தது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய கடற்படையினர் குறித்த கப்பலை சோதனையிட்டபோது போலித் தகவல்களை வழங்கியமை தெரியவந்தது. வெகு விரைவில் இந்த இரு விசாரணை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறு நில அதிர்வு-

earth quakeகண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. நேற்றிரவு 10.17மணியளவில் கண்டி மற்றும் மாத்தளை பகுதிகளிற்கு அண்மித்த பிரதேசங்களில் நில அதிர்வு பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர் சிறிவர்ந்தன கூறியுள்ளார். 3 ரிக்டர் அளவுக்கும் குறைவான நில அதிர்வே பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள புவி சரிதவியல் ஆய்வு மையத்திலும் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. கண்டி, எல்லெபொல, வெவேகம, கிதுலெமட, மாரிபே தென்ன உள்ளிட்ட பல கிராமங்களில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என புவிச்சரிதவியல் தொடர்பான பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார். நீர் நிலைகளுக்கு அருகில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருபது தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு-

fgfவைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலைகளில் இரு வைத்தியர்கள் இருக்க வேண்டுமென்ற போதிலும் அநேகமான சந்தரப்பங்களில் ஒரு வைத்தியரே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த வைத்தியசாலைகளுக்கு மேலுமொரு வைத்தியர் வீதம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். இதன் கீழ் மூதூர்,கிண்ணியா,பருத்தித்துறை,வெல்லவாய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-

sfdfdfdfdfகைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவீரர்கள் சகலரையும் விடுவிக்குமாறு கோரி, கொட்டாவ போதிக்கு அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஜனாதிபதி ஆலோசகர் பெங்கமுவ நாலக்க தேரர் மற்றும் ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட பிரிவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.