ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல அனுமதி-

jonstonமுன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரதான நீதவான் இன்று வழங்கியுள்ளார். அதற்கமைய ஜனவரி நான்காம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய உத்தரவு பிறப்பித்துள்ளார். சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபருக்கு நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மனைவி சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதன் காணரமாக நகர்த்தல் பத்திரம் ஒன்று ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வெளிநாடு செல்வதற்காக நீதி மன்ற அனுமதியை கோரழ இருந்தார். அதற்கமைய கோரிக்கைக்கான அனுமதி நீதவானினால் வழங்கப்பட்டதோடு 25 இலட்சம் ஷரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர் விமான நிலையத்தின் ஊடாக வெளிhடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகி குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறும் சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.