Header image alt text

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் சரத் பொன்சேக்காவின் கட்சி-

fonsekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ஜனநாயக கட்சியானது, அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சரத் பொன்சேக்கா நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், தமது கணவர் அமைச்சுப் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் பாரியார் அனோமா பொன்சேக்கா தெரிவித்திருந்தார்.

சாய்ந்தமருது பகுதி வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு-

ammunitionஅம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது அல் அமான் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் வளாகத்தில் அமைந்துள்ள மலசலக்கூட குழியொன்றிலிருந்து கழிவுகளை அகற்றியபோதே, மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 16 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 13 வெற்றுத்தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைக்குண்டொன்றும், 33 டி 56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மேற்படி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை-ஜனாதிபதி மைத்திரிபால-

maithriயார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 9 யோசனைகளை முன்வைத்துள்ளது.

எனினும் யார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் சமஷ்டிக்கு இடமேயில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் கைது-

Fishஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒன்பது தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அனலைதீவு வடக்கு கடற்பிரதேசத்தில் இவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் தற்போது கடற்படையினரின் வசம் உள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் யாழ் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள்-

sfdfdfdஅதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவிக்கின்றது. மக்களை திசை திருப்பி மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக இது காணப்படுகிறது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி இருப்பதாகவும் மக்களை அறிவுறுத்துவதற்காக போஸ்டர் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்கும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சந்தேகம் ஏற்பட்டால் 1900 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷவிடம் விசாரணை, மஹிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் விசாரணை-

yosithamahi முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவிடம் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்வதற்காகவே நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழப்பு-

cut killed (2)முல்லைத்தீவு, மாந்தை கிழக்கில் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,

இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாந்தை கிழக்கின் நட்டாங்கண்டல் சிறாட்டிக்குளம் வயல்வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பாண்டியன்குளம் 50 வீட்டுத்திட்டத்தினைச் சேர்ந்த சந்திரபாலன் சந்திரகுமார் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நட்டாங்கண்டலைச் சேர்ந்த தங்கராசா குணதீபன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்-

cable carநுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபிள் கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் நேற்றையதினம் பிற்பகல் நுவரெலியாவில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06மாத காலத்துக்குள் இப்பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக நுவரெலியா நகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்துள்ளார்.

இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது-ஜனாதிபதி-

vvஇலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிண நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். யுத்தத்தின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை. இலங்கையின் இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின்போது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த எவரேனும் ஒருவரினால் தவறிழைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணைப் பொறிமுறைக்குள் கண்டறியப்பட வேண்டும். தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதற்கு முன்னரும் நாம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம். எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக விஷேடமாக வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும், என்றாலும் வெளிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது. Read more

சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக வவுனியா இளைஞன் ஸ்ரீ.கேசவன்-

6134சார்ஜாவின் 7வது சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாசி மாதம் 01ம் திகதி முதல் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது. மேற்படி ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்று வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக பங்குபெறும் சாரணன் ஸ்ரீகரன் கேசவன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் என்பதுடன் 2013ம் ஆண்டு சிரேஷ்ட மாணவத் தலைவனாக செயலாற்றியதுடன்

2012ம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளதுடன் தொடர்ந்து சாரணர் வளர்ச்சியில் அரும்பாடுபடும் ஓர் இளைஞன் என்பதுடன் வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் சமூக சேவையாற்றி வருகின்றார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதிய மடிக்கணனி அன்பளிப்பு-

jவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பிரிவு மாணவி செல்வி நே.பத்மலதா அவர்களுக்கு இம் மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இவரது சகோதரன் 2007ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது காணாமல் போயுள்ளார். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் மேற்படி மாணவி விடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தற்பரானந்தன் சுகந்தன் ((KFC Manager Jaffna) என்பவரால் அன்பளிப்பு செய்யபட்டு

இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை காரியாலத்தில் வைத்து வட்டுக்கோட்டை இலங்கை வங்கி கிளை உத்தியோகத்தர் மோ.மைதிலி அவர்களால் கையளிக்கபட்டது. எமது வேண்டுகோளை ஏற்று மடிக்கணனியை அன்பளிப்பு செய்த த.சுகந்தன் அவர்களுற்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஸ்கொட்லாந்திற்கு விஜயம்-

D.Sithadthanஐக்கிய இராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று அதிகாலை ஸ்கொட்லாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் ஸ்கொட்லாந்து சென்றுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்று அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை ஸ்கொட்லாந்தில் விசேட கூட்டமொன்றிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றவுள்ளதோடு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யா.ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியும், புதிய கட்டிட திறப்பு விழாவும்-(படங்கள் இணைப்பு)

22.01.2016 skandavarodaya (3)யாழ். சுன்னாகம், கந்தரோடையில் அமைந்துள்ள ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியும், புதிய கட்டிடத் திறப்பு விழாவும் கடந்த 22.01.2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.வ.நந்தீஸ்வரன் அவர்களது தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஸகந்தவரோதயன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. செ.சந்திரராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்விவலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. ம.பிரிதிவிராஜா (ஸ்கந்தவரோதயன்) அவர்களும், துறைசார் விருந்தினராக திரு. சி.மகாலிங்கம் (ஸ்கந்தவரோதயன்) (ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர், உடற்கல்வி) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதையடுத்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புதிய கட்டிடத் தொகுதியினைத் திறந்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். Read more

கல்முனை பஸ்நிலைய கட்டிடத் தொகுதியில் சடலம் மீட்பு-

errerகல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூலித் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் பெரியகல்லாறு 3ஆம் பிரிவைச் சேர்ந்த தம்பிராஜா வரதராஜன் (வயது-44) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை நகரில் பழக்கடையொன்றில் தொழிலாளியாக வேலை செய்கின்ற இவர் கல்முனை பஸ்நிலையக் கட்டிடத் தொகுதியின் மேல் மாடியிலிருந்து கீழே வீழுந்திருக்கலாம் எனவும் அதனால் அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது தலையில் பெரியளவில் அடிபட்ட இரத்தக் காயம் காணப்படுகிறது எனவும் விசாரணைகள் மூலமே மேலதிக தகவல்களை அறியமுடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்க தீர்மானம்-

dfdfdஎதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஷ்கரிப்போம் என வட மாகாண, காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. அத்தோடு காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் கருத்துக்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போன உறவினர்களின் அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். “காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக, பிரதமர் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். அப்படி இறந்திருந்தால் இராணுவத்திடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்?. Read more

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 28 January 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்

vellayanமட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில்லை பிறப்பிடமாகவும், புதூரை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் நாகமணி சிவராசா (வெள்ளையன்) அவர்கள் இன்று 28.01.2016 வியாழக்கிழமை முற்பகல் 11.30அளவில் மாரடைப்பினால் மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றிய தோழரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)

IMG_3850வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் நேற்று (27.01.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகி, கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு சு.காண்டீபன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு சமூக ஆர்வலர் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் அனுசரணை வழங்கியதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. Read more

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம்-(படங்கள் இணைப்பு)

gfgfgfgfgமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.வியாழேந்திரன் என்.சிறீநேசன், சி.யோகேஸ்வரன், என்.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இறந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உறவினர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் பல முனைகளிலிருந்தும் படையினர் முன்னேறிக் கொண்டிருந்தபோது ஐந்து விமானங்கள் தாக்குதல் நடாத்தியிருந்தது. இந்நிலையில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பகுதி இறால் பண்ணைக்கு சென்ற சிறுவர்கள் முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 82பேர் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததுடன், 28, 29, 30ஆம் திகதிகளில் அடுத்தடுத்ததாக பலர் படைத்தரப்பால் சுட்டுக்கொல்லப்பட்டு மொத்தம் 170ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more