Header image alt text

மட்டக்களப்பிலிருந்து மொரட்டுவைக்கு நேரடி பஸ்சேவை-

busமுதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து மொறட்டுவைக்கான நேரடி பஸ்சேவை புத்தாண்டு தினமான இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொறட்டுவ மற்றும் பேராதனை பல்கலை கழக மாணவர்களின் நன்மைகருதி ஊவா மற்றும் மத்திய மாகாணத்தினூடாக இச்சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் துரை.மனேகரன் தெரிவித்தார். தினமும் காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்திலிருந்து புறப்படும் இப்பஸ்சேவை வவுணதீவு, கறடியனாறு, பதியதளாவ. மஹியங்கனை, பதுளையூடாக கண்டி, பேராதேனிய வழியாக வறக்காப்பொலயூடாக களனி, வெள்ளவத்தையூடாக மொறட்டுவையை அடையுமென அவர் மேலும் தெரிவித்தார். புதிய பஸ் சேவை ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போ பிராந்திய செயலாற்று முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை குடும்பம் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு, இலங்கையர் நால்வர் கைது-

Fஅமெரிக்காவின் – சான் அன்டோனியோ பிராந்தியத்தில் இருந்து இலங்கையர் ஒருவரின் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு, அங்குள்ள பொது மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை, இந்த மாதம் நாடு கடத்துவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு, பிராந்தியத்துக்கு பொறுப்பான காங்கிரஸ் உறுப்பினரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சுமார் 5 ஆயிரத்து 500 பேர் மனு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யுக்ரெயினில் இருந்து ரொமேனியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொமேனிய எல்லைப்பாதுகாப்பு படையினரால், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யுக்ரெயின் – ரொமேனிய எல்லைப்பகுதியின் ஊடாக சட்டவிரோத அகதிகள், அதிகளவில் பிரவேசிப்பதன் காரணமாக அங்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 4பேரும் அங்குள்ள ரிஸ்ஷா அருவியின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 21 முதல் 46 வயதுகளை உடையவர்கள் என கூறப்படுகின்றது.

பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் மாற வேண்டும்-

dfdfயாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத பெண்களையும் மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும் என்று யாழ். உயர் நீதிமன்ற நீதபதி மா.இளஞ்செழியர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியபிரமான நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்திய பிரமாணத்தினை செய்து கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள மாவட்டமாக மாற வேண்டும். போதைவஸ்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும். பெண்களை பாதுகாக்கும், ரவுடித்தனம், காடைத்தனம் அழிக்கப்படும் மாவட்டமாக மாறவேண்டும். இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் அனைத்து குற்றச் செயல்களையும் ஒழித்து, சமாதானமான, சுதந்திரமான யாழ். குடாநாட்டினை உருவாக்குவதற்கு, நீதித்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒத்துழைத்துக்க வேண்டும். Read more

நீதிபதிகள் இடமாற்றம்-

Posted by plotenewseditor on 1 January 2016
Posted in செய்திகள் 

நீதிபதிகள் இடமாற்றம்-

judegeமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம், களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ங்களுக்கு இன்று தொடக்கம் வேறு நீதிமன்றங்களில் கடமையாற்றிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீதிமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக பருத்தித்துரை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த என்.கணேசராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.பி.முகைதீன், மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியாக வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.ஐ.எம்.றிஸ்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வாழைச்சேனை நீதிமன்றத்தின் நீதிபதியாக வவுனியா மாவட்டநீதிமன்றத்தின் மேலதிக மாவட்ட நீதிபதியாக இருந்த எம்.றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய என்.எம்.அப்துல்லாஹ் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய Read more