நீதிபதிகள் இடமாற்றம்-

judegeமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம், களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ங்களுக்கு இன்று தொடக்கம் வேறு நீதிமன்றங்களில் கடமையாற்றிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீதிமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக பருத்தித்துரை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த என்.கணேசராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.பி.முகைதீன், மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியாக வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.ஐ.எம்.றிஸ்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வாழைச்சேனை நீதிமன்றத்தின் நீதிபதியாக வவுனியா மாவட்டநீதிமன்றத்தின் மேலதிக மாவட்ட நீதிபதியாக இருந்த எம்.றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய என்.எம்.அப்துல்லாஹ் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ரி.ஏ.மனாப் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதியாகவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதிபதியாகவும் கடமையாற்றிய ஏ.எம்.றியாழ் ஊர்காவற்குதரை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.ஐ.எம்.றிஸ்வி களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.