பிரதமர் ரணில் சுவிஸ_க்கு விஜயம், நவாஸ் ஷெரீப் இலங்கை விஜயம்-

ranilnavasபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் சுவிட்சர்லாந்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தற்போது அவர் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்காண்டுள்ளார். இதேவேளை பாகிஸ்தானின் பிரதமர் நவாஷ் ஷெரிப் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 10 உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உணவு ஒவ்வாமையால் 250பேர் வைத்தியசாலையில் அனுமதி-

sdபலாங்கொடையிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 250பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உண்டதையடுத்தே ஊழியர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எதுஎவ்வாறு இருப்பினும் இவர்களது நிலை ஆபத்தானதாக இல்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் குறித்த தொழிற்சாலையில் இடம்பெற்ற உற்சவத்தின் பின் இவர்கள் சுகயீனமுற்றதாக தெரியவருகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 13,000 வாகனங்கள்-

ssமீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 13 ஆயிரம் வாகனங்கள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

இவ்வாறு பெருமளவான வாகனங்கள் இலங்கை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என துறைமுக அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரம்-

ddfபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

வரவு செலவுத்திட்ட ஆலோசனைகளில் ரத்துச் செய்யப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வைத்தியர்கள் அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பு காரணமாக மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்-

ffgதிருகோணமலையில் 2006ஆம் வருடம் கடற்கரை முன்றலில் கொல்லப்பட்ட 5 மாணவர்களது 10ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையத்தில் இது நடைபெற்றுள்ளது.

வண.பிதா க.பிரபாகரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும் இந்து கத்தோலிக்க மதகுருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.