Header image alt text

கரவை சிந்தாமணி விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும், பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு)

20160102_153326_resizedயாழ். கரவெட்டி சிந்தாமணி விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் முன்பள்ளியின் தலைவர் திரு. ந.சிறீகாந்த் அவர்களது தலைமையில் நேற்று (02.01.2016) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன், திரு. க.பொன்னையா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்தினர்கள் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்தும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
Read more

கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ கையளிப்பு-(படங்கள் இணைப்பு)

20160102_135543_resizedயாழ். கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ (multimedia projector) வழங்கும் நிகழ்வு நேற்று (02.01.2016) இடம்பெற்றது.

வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பல்லூடக எறியீ இனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களுடன், வைத்தியக்கலாநிதி மங்கையர்மணி, வைத்தியக்கலாநிதி கேதீஸ்வரன்(வட மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி பல்லூடக எறியீயானது கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
Read more

சம்பூர் மகா வித்தியாலயத்தை கையளிக்கும்படி கோரிக்கை-

dgfgfகடற்படையினரின் வசமுள்ள சம்பூர் மகாவித்தியாலயத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2006ம் ஆண்டு திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆயுத மோதல்களால் சம்பூர் பிரதேச மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. அதன் பின்னர் இன்றுவரை கடந்த 10 வருடங்களாக சம்பூர் மகாவித்தியாலயமும், அதனைச் சூழவுள்ள பெருந்தொகையான குடிநிலப்பரப்பும் கடற்படை முகாமாகவும் கடற்படையினரின் ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2015ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம், மக்களுக்குச் சொந்தமான காணிகளை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. Read more

தோழர் சுந்தரம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம்-

vcvcvcvcvvvதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச.சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 34ஆவது ஆண்டு நினைவுதினம் 02.01.2016 ஆகும்

அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகங்களில் நேற்று நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள்

02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் ~~புதியபாதை~~ பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

கடற்படை முகாமுக்கு நிலங்களை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு-

sdfdfdமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. அங்கு கடற்படையினருக்கான முகாம் ஒன்றை அமைப்பதற்காகவே நிலம் கையகப்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது மறைமுகமாக சிங்கள மக்களின் குடியேற்றத்துக்கு உதவும் நடவடிக்கை என, வட மாகாண சபையின் துணை அவைத் தலைவர் அண்டனி ஜெகநாதன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு முகாம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவையில்லை என்றும், அந்தப் படைத்தளத்தை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தினரை குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இநிநிலையில் பரம்பரை பரம்பரையாக தான் உட்பட அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தமது நிலங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று சனிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் தாங்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மயில் மாளிகை விவகாரம்: லியனகேவுக்கு அழைப்பு-

sadsdsdமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 730 மில்லியன் ஷரூபாய் மதிப்புள்ள தனது பீகொக்(மயில்) மாளிகையை கொடுக்க முன்வந்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலஞ்ச, ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோடீஸ்வர வர்த்தகரும் இலங்கைத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, ராஜகிரியவிலுள்ள தனது பீகொக் மாளிகையை அவருக்கு வழங்க ஏ.எஸ்.பி லியனகே முன்வந்திருந்தார். எனினும், இறுதிநேரத்தில் மாளிகையை மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலேயே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பரணகம ஆணைக்குழு ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு, ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துடன் இந்த ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் நிறைவடையவுள்ளது.

எனினும் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், இதற்கான அதிகார கால நீடிப்பை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, இந்த சந்திப்புக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில், அதனை கலைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை உறுதியாகவில்லை-

al hussainஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹசைனின் இலங்கை விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில், கடந்த வருடம் ஜுன் மாதமே அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது. எனினும் பல்வேறு காரணங்களுக்காக இந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது அறிக்கை-

tamil makkal avaiஅரசியல் தீர்வு சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்ட தீர்மானங்களின் முதலாவது அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படுமென, தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவின் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவின் கன்னி அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது. இதன் பொருட்டு பிற்பகல் 3.30 அளவில் நல்லூர் ஆலயத்திலும் அதனைத் தொடர்நது யாழ். மரியன்னை பேராலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. சுமார் மூன்று மணித்தியாலயங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இரவு 7.00 மணியளவில் நிறைவடைந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

அத்துடன் தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்கான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதுடன், 30ம் திகதி முதல் அறிக்கை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் கையளிக்கப்படுமென்றும் அவர் கூறினார். Read more