தமிழ் கைதிகளின் உறவினர்கள் வடக்கு முதல்வரிடம் மகஜர் கையளிப்பு-

dfdfdffffதமது உறவுகளை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தமிழ் கைதிகளின் உறவினர்கள் சிலர் இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தே கைதிகளின் உறவினர்கள் மகஜரை கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்து மகஜரை கையளித்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் எந்தனி சகாயன் குறிப்பிட்டார். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விரைவில் விடுவிக்குமாறு தமிழ் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கண்டிக்கு விஜயம்-

fdfgfஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் இன்று கண்டி தலதாமாளிகைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளித்ததுடன் தலதா மாளிகை தியவடன நிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார்.

சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள முன்னாள் பாகிஸ்தானின் பிரதமர் அலி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தையும் நவாஸ் ஷரிப் பார்வையிட்டுள்ளார். இதன்பின் தேசிய அருங்காட்சிசாலையில் உள்ள பாகிஸ்தானின் பண்டை கால பொக்கிஷங்களை பார்வையிட்டதுடன், பேராதனை தேசிய பூங்காவில் கண்டி விஜயத்திற்கான ஞாபகார்த்த மரநடுகை நிகழ்விலும் ஈடுப்பட்டுள்ளார். இவர் கண்டி தலதா மாளிகை மற்றும் மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இன்றுமாலை நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.

மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு-

dfdfdமன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்பாக உள்ள வீடொன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்றுகாலை மீட்டுள்ளனர். மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும்; குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வீடொன்றை வாடகைக்கு பெற்று தனிமையில் வசித்து வந்ததாகவும் பாடசாலை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கில பாடம் நீண்ட காலமாக கற்பித்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே குறித்த நபர் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு பாகிஸ்தான் 8 ஜெட் விமானங்கள் விற்பனை-

rertrஇலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விஜயம் செய்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில், நேற்று எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதுகுறித்து, கொழும்பில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரீஃப் பேசியபோது, “’அண்டை நாடு என்பதையும் தாண்டி, இலங்கையுடனான பாகிஸ்தானின் உறவு உணர்வுப்பூர்வமானது. பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் பாகிஸ்தானுடன் தோளோடு தோள் நின்று இலங்கை உதவி புரிந்திருக்கிறது. இந்த உறவை மேலும் பலப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், கலாசாரம், சுகாதாரம், நகை-நவரத்தினங்கள், கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம், வேளாண்மை ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஜே.எஃப்.17 தண்டர்´ ரக ஜெட் போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இலங்கைக்கு 8 ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படும். இந்த ஒப்பந்தங்களை விரைவில் செயல்படுத்தும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இராணுவ வீரர்மீது இனந்தெரியாதோர் தாக்குதல்-

555 (5)யாழ்ப்பாணம் கைதடி பிரதேசத்தில் வைத்து இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழு அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கே.கே.எஸ். இராணுமுகாமில் பணியாற்றும் மறவன்புலவைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற வானிலையால் வவுனியாவில் 6 குடும்பங்கள் இடம்பெயர்வு-

ddfdfவவுனியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியா வடக்கு கனகராயன்குளத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள், கனகராயன்குளம் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் துறைமுக ஊடக காரியாலயத்துக்கு சீல் வைப்பு-

sealஇலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊடக காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்றுமாலை முதல் இந்த காரியாலயத்தின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக, இலங்கை துறைமுக அதிகாரசபையின் அகில இலங்கை பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மாஹாகமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக செயற்படுமாறு கோரியும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அகில இலங்கை பொதுசேவைகள் சங்கம், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி மோசடியை காரணம் காட்டியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்-

AUTOகொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர வண்டிக்கான பிரிவின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலை வந்தால் தாம் பலத்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நடாத்துவதற்குத் தயாராகி வருவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்புக்குள் முச்சக்கர வண்டிகள் நுழைவது மற்றும் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முனையும் அரசு அதற்குப் பதிலாக சிறிய ரக நனோ வாகனங்களைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தொடர்புகளை மீளப் புதுப்பிக்க நோர்வே அமைச்சர் வருகை-

NORWAYஅரசியல் தொடர்புகளை மீளப் புதுப்பிக்கும் நோக்குடன், அடுத்த வாரமளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது சமாதான முயற்சிகளில் நோர்வே ஈடுபட்டிருந்தது.

எனினும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 2006ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு வருகைதரும் முதல் நோர்வே அமைச்சர் இவர் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு சுட்டக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை புதிய குழு நியமனம்-

sivajiபுதிய அரசியலமைப்பு குறித்த யோசனைகளை முன்வைப்பதற்காக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான, தமிழ் மக்கள் பேரவை புதிய குழுவொன்றை நியமித்துள்ளது.

குறித்த குழுவில் 15 பேர் அடங்குவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குழுவினர் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைக்க விரைவில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி மாவட்டத்தில் முதல் நிலை-

studentவெளியாகிய உயர்தர பரீட்சையில் நுண்கலைப்பிரிவில் செல்வி இராஜகோபால் சுதர்சினி வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளதுடன்,

அகில இலங்கை ரீதியில் 70ம் நிலையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடிய போரால் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகமாக தமிழர்கள் நாங்கள் இருந்தாலும்,

தளராத மன நிலையுடன் கல்வியில் அக்கறை செலுத்தியதால் தான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததாக மாணவி சுதர்சினி தெரிவித்துள்ளார்.

 

ஓம் நமச்சிவாய சிவ ஆராதனையும் சிவ ஆன்மீக யாத்திரையும்-(படங்கள் இணைப்பு)

P1110521சித்தன்கேணி வீணாகாண குருபீடம் குரு முதல்வர்களது நல் ஆசிகளுடன் ஓம் நமச்சிவாய சிவ ஆராதனையும் சிவ ஆன்மீக யாத்திரையும் கடந்த 02.01.2016 அன்று வீணாகாண குருபீட அமைப்பாளர் சந்நிதாச்சாரியார் சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், அந்தன சிவாச்சாரியர்கள், சிம்யா மிசன் வதிவிட சுவாமிகள் யாக்றீட் சைத்தன்யா, பாடசாலை மாணவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நல்லூர் வீரமகாகாளி அம்மன் கோவிலில் காலை 8.00 மணி முதலாக சிவ ஆராதனை இடம்பெற்று தொடர்ந்து ஓம் நமச்சிவாய ஆன்மீக யாத்திரை 2.30 மணியளவில் ஆரம்பமாகி பரித்தித்துரை வீதி வழியாக

ஆரியகுளம் சந்தி – வேம்படிச்சந்தி –ஆஸ்பத்திரி வீதி – சத்திரத்துச் சந்தி –முட்டாஸ் கடை சந்தி – ஊடாக வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நிறைவடைந்தது.
Read more