வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 30 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு. (படங்கள் இணைப்பு)-
யாழ். வேலணைப் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் வயதான பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் என சுமார் 30 பாடசாலை மாணவர்கள் கஸ்டமான சூழல் நிலைகளினால்
பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் தொடர்ந்து கல்வியினைக் கற்பதற்கு மிக பிரதான தடையாக காணப்படும் பாடசாலை உபகரணங்களை தந்துதவுமாறு வேலணைப் பிரதேச செயலகத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக இன்று வேலணைப் பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் முன்னிலையில் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் சுமார் 31875 ரூபா பெறுமதியான புத்தகப்பைகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பேனாக்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)