Header image alt text

ஓட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலய புதிய கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு))

image_2முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று (08.01.2016) பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்), வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கனகரத்தினம்,

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விருந்தனர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. Read more

பொங்கல் விழாவை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடாத்த முடிவு-


sfdfdfdfஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் தேசிய தைப்பொங்கல் விழாவை புறக்கணிக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அன்ரனி சகாயம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழ் அரசியல்கைதிகளின் பெற்றோர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். யுhழில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதில் கலந்து கொள்ளவென யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் குடும்பத்தினரால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடந்த புதன்கிழமை கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.
Read more

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

photo 4ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை நிகழ்வு நேற்றுக்காலை 9.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்),

மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

பாலத்தடிச்சேனை பொதுமக்களின் காணிகள் படையினரால் ஒப்படைப்பு-

sdfdfதிருகோணமலை மூதூர் பிரதேசத்திலுள்ள பாலத்தடிச்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணிகளும் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களும் 25 ஆண்டுகளின் பின்னர் உரிமையாளர்களிடம் நேற்று மீளக் கையளிக்கப்பட்டன. 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவ முகாம் அமைந்திருந்த குறித்த காணிகளில், இறுதியாக முகாமிட்டிருந்த இராணுவத்தின் 5வது ஆட்லெறி படைப்பிரிவு தற்போது வெளியேறியுள்ளது. 1985ம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற இன வன்முறைகளை அடுத்து பாலத்தடிச்சேனை கிராம மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில், இராணுவம் அந்த இடத்தில் முகாம் அமைத்திருந்தது. இங்கிருந்த ஆலயம், தோட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்களை ஒரு தொகுதியாகக் கொண்டு பாதுகாப்பு அரண்களும் வேறு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களின் காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக அம்மக்கள் கூறியுள்ளனர். Read more

மஸ்கெலியாவில் தொழிலாளர் குடியிருப்புகள் எரிந்து நாசம்-(படங்கள் இணைப்பு)

sfdf (2)நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்றுபகல் 12மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. Read more

ஹிருணிகா பிரேமச்சந்திர கைதாகி பிணையில் விடுவிப்பு-

hirunikaஇன்றுகாலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றுகாலை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது-

trainகுருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை பகுதிகளுக்கிடையில் தடம்புரண்டுள்ளது.

இன்றுகாலை 9 மணியளவில் ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலை மீண்டும் தண்டாவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. ரயில் தடம்புரண்டதை அடுத்து தடைப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதான பாதையின் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை-இராணுவதளபதி-

army chiefநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நிருபர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குகின்றது.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்பில்லை. இராணுவம் அதற்கு ஒருபோதுமே அனுமதிக்காது,

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இராணுவம் தொடர்ந்தும் உதவும் என இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்-

graduateஅரச சேவையில் மேலுமொரு தொகுதி பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அண்மையில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில், நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இவர்களுக்கான நியமனங்களை பிரதமர் வழங்கி வைக்கவுள்ளார்.