Header image alt text

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 42ம் ஆண்டு நினைவுதினம்- (படங்கள் இணைப்பு)

sdffdfdf1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 42ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 42ஆவது ஆண்டு நினைவு தினமாகிய இன்று யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.30அளவில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அரியகுட்டி பரம்சோதி, வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நினைவுச்சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர். Read more

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயம்-

jeyashankarஇந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜயசங்கர் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்யவிருப்பதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 12ம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் அன்றையதினம் காலை மாலைதீவில் இருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளரின் இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ளார்.

யாழில் இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை மக்களிடம் கைளயளிக்கவுள்ளார். மேலும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 104 தமிழக மீனவர்களை பொங்கல் தினத்தை முன்னிட்டு விடுவிப்பது குறித்தும் அவர் அதிக கவனம் செலுத்துவாரென கூறப்படுகின்றது.

மீள்குடியேறிய மக்களுக்கு உதவுவதற்கு நோர்வே முன்வருகை-

norwayஅண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள குடியேறிய மக்களுக்கு மேலும் உதவி மற்றும் ஒத்துழைப்பினை வழங்க, நோர்வே முன்வந்துள்ளது.

இதற்கமைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் நோர்வே அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைய அண்மையில் மீள் குடியேறியவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட ஆலோசனைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு, என்பன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம்-

hugo swireபிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர், எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்ட இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுண்கள் நிதியை வழங்கியிருந்தது.

குறிப்பாக இலங்கைப் படையினரின் பயிற்சிகள் மற்றும் மறுசீரமைப்புக்காக இந்நிதி வழங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான விசேட தூதுவர் ஒருவரையும் நியமித்திருந்தது. இந்த நிலையில், ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில், பிரித்தானிய ராஜாங்க அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பேசப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இலங்கை வருவதற்கு முற்பட்டவர் கைது-

arrestசட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் என தமிழக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை செல்ல நேற்று முன்தினம் பகல் இராமேஸ்வரம் வந்து, இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிசார், குறித்த நபரைக் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.