உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 42ம் ஆண்டு நினைவுதினம்- (படங்கள் இணைப்பு)

sdffdfdf1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 42ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 42ஆவது ஆண்டு நினைவு தினமாகிய இன்று யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.30அளவில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அரியகுட்டி பரம்சோதி, வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நினைவுச்சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர். thoopi (1) thoopi (1)