மண் ஏற்ற அனுமதிப் பத்திரம் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்-

fdfdfமண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன.

மண் அகழ்வுகளில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் பாரஊர்த்தி உரிமையாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் அரசடிப் பகுதியில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மும்மொழிகளிலுமான பதாதைகளயும் ஏந்தியிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட அரசியல் பிரமுகர்களும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வியாழேந்திரன் அவர்களிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தவர்களினால் கையளிக்கப்பட்டது.

வித்தியா கொலை விடயம் மூவரை மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்க உத்தரவு-

vithyaயாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மூன்று சந்தேகநபர்களை கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறும், ஏனைய சந்தேகநபர்களை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் புங்குடுதீவில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 13ஆம் திகதி மாணவி வித்தியா சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து வித்தியாவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

வெலிமடையில் பதற்றநிலை, விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு-

sfdfdஅமைதியின்மை காரணமாக பண்டாரவளை – வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டயரபா பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றில் கடந்த 31ஆம் திகதி ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார். இவ்வாறு காயமடைந்த நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பிரதேசவாசிகள் மதுபானசாலைக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதன்போது, பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இரத்தினபுரி எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அங்கும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

வட மாகாணசபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் கலந்துரையாடல்-

npc2_CIவடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி அமைச்சர்கள் நீங்கலாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் யாழ். சோமசுந்தரா அவனியூவில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட சிலர் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதோடு, வட மாகாணசபை உறுப்பினர்கள் சுமார் 25பேரளவில் இதில் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

இக்கலந்துரையாடலின்போது வட மாகாணசபையின் வேலைத்திட்டங்கள் மற்றும் மாகாணசபை நிர்வாகத்தை வினைத்திறனுடன் கொண்டுசெல்வது தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதோடு, தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமான விவாதங்களும் நடைபெற்றதாக தெரியவருகின்றது.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது-

karunasenaநாட்டில் போர் சூழ்நிலை காணப்படாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. பாதுகாப்பு தந்திரோபாயம் குறித்து சிறிதளவு அறிந்தவர்களாலும் இதனை விளங்கிக் கொள்ளமுடியும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடமிருந்து தாக்குதல்கள் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய முயல்வது குறித்து இந்தியா தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் இல்லாததால் நாடு பாதுகாப்பு கட்டமைப்புகளை கலைத்துவிடப்போகின்றது என கருதுகிறீர்களா? யுத்தம் காணப்படாவிட்டாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம்.

இதன்காரணமாக தாக்குதல் விமானங்கள் மாத்திரமல்ல கடலோர கண்காணிப்பு கப்பல்களும் அவசியம். இலங்கை விமானப்படையை தரமுயர்த்துவதற்காக புதிய விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளது. Read more