வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு உதவிகள்
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவக் குடும்பங்களின் 130 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அதேநேரம் மேலும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த தாய் தந்தையரை இழந்த 92 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.