இலங்கையில் இனி அரசியல் கைதிகள் என எவரும் இருக்கமாட்டார்கள்.- பிரதமர் ரணில்

ranilபோட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக,  அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிற்ஸர்லாந்தில் இன்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இனி தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலானோர் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படலாம் எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் குறித்து விஷேட கலந்துரையாடல் – ஜனாதிபதி
 
maithriவடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர், வடக்கு ஆளுனர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய நத்தார் தின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்கும் விஜயம் செய்தார்.

இதன்போது அம் மக்களை 6 மாத காலப்பகுதிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அதிகாரிகளிடம் வினவியதோடு, வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

சிங்கப்பூரில் 27 வங்கதேசப் பிரஜைகள் கைது

singaporeசிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கதேசப் பிரஜைகள் இருபத்து ஏழு பேரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் மட்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்கப்பூரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைபார்த்துவந்த இவர்கள் அனைவரும் அண்மைய வாரங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் கடும்போக்கு கருத்துகளையும், ஜிகாதி சித்தாந்தம் தரவுகளையும் பரிமாறிக்கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரிலேயே வங்கதேசப் பிரஜைகள் வேறு பலரை தமது குழுவில் சேர்க்க இவர்கள் முயன்று வந்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தால்குதல்
 
Pakபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாக அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் நடந்தபோது இந்த பல்கலைக்கழக வளாகத்துக்குள் சுமார் 3500 பேர் வரை இருந்ததுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு, தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது எனவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போது அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டு, அந்த நாட்டு காவல்துறை அதனைச் சுற்றிவளைத்துள்ளது.