ஈழத்துப் பாடல்கள் – பகுதி ஒன்று – சீவகன் (BBC)

tamilஎழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை. துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது.அங்கு வாழும் தமிழர்களின் இசை முயற்சிகள் என்பன அவற்றையும் கடந்து அவர்களின் வாழ்வின் பல அம்சங்களோடும் கலந்தவை.

அவர்களின் தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குப் பாடல்கள் அவற்றில் ஓரளவுக்கு மூத்தவை,

அதேவேளை, அங்குள்ள தமிழர்களின் நாட்டார் பாடல்களின் இசையும், கூத்தின் இசையும், அருகே இருந்த சிங்கள மக்களின் இசை வடிவங்களும், அவ்வளவு ஏன் ஆதிக்குடிகளான வேடர்களின் இசையும் கூட இலங்கை தமிழர் இசையின் வேர்களாக கருதப்படக் கூடியவை.

இலங்கையை முதல் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்களான போர்த்துக்கீஸரின் மூலம் அங்கே வந்த பைலா ஆடலுக்கான இசையும் இலங்கை பாடல்களில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து உள்ளூர் பாடல்களை பாடவேண்டும் என்ற ஒரு தரப்பினரின் வேட்கை அங்கே இலங்கைக்கென ஒருவகை மெல்லிசையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த மெல்லிசையின் வளர்ச்சிக்கு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுதாபன தமிழ் பிரிவு கணிசமான பங்களிப்பை செய்துள்ள. அதனை அடுத்து 80களில் ஏற்பட்ட போரும், புலப்பெயர்வும் ஏனைய விடயங்களும் இந்த இசை முயற்சிகளில் ஒரு இடைவெளியை ஏற்படுத்த அங்கே, தமிழீழ விடுதலைப்போருக்காக போரிட்ட தமிழ் இயக்கங்கள் அங்கு, தமது பிரச்சாரத்துக்கும், ஆட்சேர்ப்புக்காகவும் பாடல்களை இயற்றி இசையமைத்து பாடியிருக்கின்றன. இவையும் இலங்கை இசை மற்றும் பாடல்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பல்வேறு காலகட்டங்களிலும் வெளிநாடுகளில் இருந்து உள்வாங்கப்பட்ட இசையும் இலங்கையின் தமிழர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இவை குறித்த சில கருத்துக்களின் தொகுப்பே இந்த தொடர். இதன் முதல் பாகத்தில் இலங்கை தமிழர்களின் சில பகுதிகளில் கோயில்களில் பாடப்படும் சடங்குப் பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1

பிபிசி தமிழோசைக்காக தயாரித்து வழங்குபவர் பூபாலரட்ணம் சீவகன்.