Header image alt text

குப்பிளான் தெற்கு கலைவாணி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

DSC_0164 (1)யாழ். குப்பிளான் தெற்கு கலைவாணி சனசமூக நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் 23.01.2016 குப்பிளான் தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சனசமூக நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

நிலவெடிப்பு இடம்பெற்ற பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பார்வையிட்டார்-(படங்கள் இணைப்பு)

navakiri (2)யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவி சரிதவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்குடா நாட்டின் நிலத்தின் தன்மையை பொருத்தவரையில், இவ்வாறான சிறு சம்பவங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் துறையின் பேராசிரியர் எஸ்.ரி.பீ. இராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நிலாவரைக் கிணறை அண்மித்த நவகிரி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலத்துக்கடியில் காணப்படும் சுண்ணாம்புக் கற்பாறைகள் கரைவதால் இவ்வாறான நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது நிலநடுக்கம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சிறு சம்பவங்கள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நவகிரி பகுதியில் நேற்றுமுன்தினம் (23.01.2016) அதிகாலை 1மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. இதனை கேள்வியுற்ற யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உடன் அப்பிரதேசத்திற்கு விஜயம்செய்து பாதிக்கப்பட்ட வீடு உள்ளிட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டதோடு, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தார். Read more

தனது கடப்பாட்டினை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்-

human rightயுத்தகால துஷ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 21ம் திகதி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க போதுமான வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கைக்குள்ளேயே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக இலங்கையரசு சர்வதேச பங்களிப்பை கோரியது, எனவே அதிலிருந்து தற்போது பின்வாங்க கூடாது என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகளிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமில்லாத ஒன்றல்ல மாறாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியான வாக்குறுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லலித் கொத்தலாவல ஊழல் மோசடி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்-

kothalawalaபிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் , இன்று ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கே முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி. சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். கொள்ளுபிட்டி காலி வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டமொன்றின் நிர்மானப்பணியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் அளிப்பதற்கே அவர் வருகை தந்துள்ளதாக லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் குழுவின் விஜயம்-

Zeid Raad al-Husseinமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹ_சைன் தலைமையிலான குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. உள்ளக நல்லிணக்கப்பொறிமுறையின் முன்னேற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பவை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹ_சைனின் இலங்கை விஜயத்தின் முக்கிய விடயங்களாக கருதப்படும் என ஐ நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகள் ஆணையாளர், ஆளும் மற்றும் எதிர் த்தரப்பு சந்திப்புகளுக்கு அப்பால் வடக்கு விஜயம், சிவில் சமூக சந்திப்புகள், வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ஷ ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை-

shranthiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகவில்லை என, தெரியவந்துள்ளது. இவர் தனது சட்டத்தரணி மூலம் பிறிதொரு தினத்தை இதற்காக கோரியுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் தாம் அவருக்கு வேறொரு நாளை வழங்கவில்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஊடக இணைப்பாளர் என கூறப்படும் மஹிந்த ரத்நாயக்கவுக்கு வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறவே ஷிராந்தி, ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதாகவும் லெசில் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றவேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் தண்ணீர் இறைக்கும் மோட்டார் அன்பளிப்பு-

rவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு தண்ணீர் இறைக்கும் நீர் இறைக்கும் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டன.

ஜெகதீஸ்வரன் கடந்த கால யுத்தத்தின்போது தலையில் ஏற்பட்ட காயத்தினால் தனது இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார்.

இவர் அன்றாடம் தமக்கு தண்ணீர் எடுப்பதற்கான பிரச்சனை தொடர்பாக எமக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே 29,298 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புலம்பெயர்வு உறவுகள் வழங்கிய நிதியில் இருந்து அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)