நிலவெடிப்பு இடம்பெற்ற பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பார்வையிட்டார்-(படங்கள் இணைப்பு)

navakiri (2)யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவி சரிதவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்குடா நாட்டின் நிலத்தின் தன்மையை பொருத்தவரையில், இவ்வாறான சிறு சம்பவங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் துறையின் பேராசிரியர் எஸ்.ரி.பீ. இராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நிலாவரைக் கிணறை அண்மித்த நவகிரி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலத்துக்கடியில் காணப்படும் சுண்ணாம்புக் கற்பாறைகள் கரைவதால் இவ்வாறான நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது நிலநடுக்கம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சிறு சம்பவங்கள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நவகிரி பகுதியில் நேற்றுமுன்தினம் (23.01.2016) அதிகாலை 1மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. இதனை கேள்வியுற்ற யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உடன் அப்பிரதேசத்திற்கு விஜயம்செய்து பாதிக்கப்பட்ட வீடு உள்ளிட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டதோடு, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தார்.

navakiri (1) navakiri (2) navakiri (3) navakiri (4) navakiri (5) fg rtrtrt