குப்பிளான் தெற்கு கலைவாணி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
யாழ். குப்பிளான் தெற்கு கலைவாணி சனசமூக நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் 23.01.2016 குப்பிளான் தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சனசமூக நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.