Header image alt text

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துணுக்காய் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை புத்தகப்பைகள் காலணிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

A2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2ம் கட்டமாக துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் வலயக்கல்வி பணிமனை விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இன்று 2ம் கட்டமாக துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் தாய் தந்தையயை இழந்த பிள்ளைகள், பெண்தலமைத்துவக் குடும்பங்களின் பிள்ளைகள் என அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக சுமார் 158,000 ரூபா பெறுமதியான 8 துவிச்சக்கரவண்டிகளும் 60 புத்தகப்பைகள் மற்றும் 44 காலணிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் செயற்றிட்டத்திற்கு நிதி அனுசரனைகளினை 8 துவிச்சக்கர வண்டிகளுக்குமான சுமார் 80000 ரூபாவினை வட்டுக்கோட்டை சேர்நத புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த ஒர் கருணையுள்ளம் கொண்ட பெண்மணியும், 44 காலணிகளுக்குமான நிதியினை வட்டுக்கோட்டை சேர்நத புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிவராசா டினேஸ் 10000 ஷரூபாவும் மற்றும் வட்டுக்கோட்டை சேர்ந்த புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த ஒர் கருணையாளன் 35000ரூபாவும் மற்றும் 60 புத்தகபைகளுக்கான 33000ரூபா நிதியினை கொழும்பில் உள்ள ஒர்கல்வி சேவையாளரும் பிரபல ஆசிரியரும் வழங்கியுள்ளனார். Read more

ஞானசார தேரர் விளக்கமறியலில் வைப்பு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றவேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து, ஹோமாகம நீதிமன்றம் முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

ஹிருணிகாவின் டிபென்டர் வாகனம் விடுவிப்பு-

defenderகொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து நபரொருவரைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தை, 45 இலட்சம் ரூபா பெறுமதியான பிணை முறியில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டவேளை, இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு குற்றப் பிரிவினரால் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள டிபென்டரை விடுவிக்குமாறு, பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். விசாரணைகள் நிறைவடைந்துள்ளமையால் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பில்லை என, கொழும்பு குற்ற பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததன் பின்னர், டிபென்டரை பிணை முறியில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தினத்தில் குறித்த வாகனத்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், டிபென்டர் வாகனத்தை மாற்றத்திற்கு உட்படுத்த கூடாது எனவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குறித்த மனு எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் கல் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் சடலமாக மீட்பு-

trincoதிருகோணமலை சம்பூர் 07ம் வட்டாரத்தில் முழுமையாக கட்டப்படாதிருந்த கிணற்றில் இருந்து, வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலியான சிறுவன் சம்பூர்-07ம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 06) எனத் தெரியவந்துள்ளது. 1ம் தரத்திற்கு இவ் வருடமே சேர்க்கப்பட்ட இவர், தனது சகோதரனுடனும் பக்கத்து வீட்டிலுள்ள சிறுவனுடனும் நேற்றுமாலை 4மணியளவில் விளையாடச் சென்றுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டு சிறுவன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் கடைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின் உயிரிழந்த சிறுவனின் தாய் பிள்ளையை தேடியுள்ளார். மாலை 5.30ஆகியும் பிள்ளை வீடு வராமையால் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பின் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சிறுவனை தேடியபோது அவர் இறந்த நிலையில் கிணறு ஒன்றுக்குள் கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதலில் சிறுவன் கிணற்றுக்குள் இடறி விழுந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்பட்டது. இது சம்பந்தமாக திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லாவிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த அவர், ஊர்மக்களுடன் உரையாடி விட்டு இன்று 12.10 அளவில் சுழி ஒடத் தெரிந்த ஒருவரை இறங்கி சடலத்தை எடுக்குமாறு கேட்டதிற்கிணங்க இளைஞன் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை எடுத்து வெளியில் கொண்டு வந்தபோது எல்லோருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. சிறுவனின் வயிற்றில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. சிறுவனுக்கு என்ன நடந்தது என்கின்ற விடயம் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ரி.எம்.வி.பி பொதுச்செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்-

prasanthanபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பெப்ரவரி 09ம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார். குறித்த வாக்குமூலத்தையடுத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.இதன் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் தடுப்பு காவல் உத்தரவை நீடிக்க நீதிமன்ற அனுமதி கோரி பொலிஸார் முன் வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.கணேசராசா தடுப்பு உத்தரவு நீடிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

எண்ணெய் கலப்பில் பாதிப்படைந்த கிணறுகள் குறித்து ஆய்வு-

chunnakam wellயாழ். சுன்னாகம் கழிவு எண்ணெய் கலப்பினால் பாதிப்படைந்த நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பது தொடர்பாக பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் 10 மணிமுதல் 1.30மணி வரை முருகேசு பண்டிதர் வீதியிலுள்ள சுன்னாகம் தெற்குச் சனசமூக நிலையத்தின் முத்தமிழ் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட புத்திஜீவிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களால் இப்பிரச்சினைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசம் முழுவதற்கும் நன்னீர் விநியோகத்தை எவ்வித தாமதங்களும் இன்றித் தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். அத்துடன் உடலியல் பாதிப்புக்களுக்கு உள்ளனர்களுக்கு மருத்துவ நிவாரணங்களை உடனடியாக வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிற்கும் கிணற்று நீரைவடிகட்ட காபன் நீர் வடிகட்டிகளை இலவசமாக வழங்கவேண்டும். Read more