வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துணுக்காய் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை புத்தகப்பைகள் காலணிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

A2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2ம் கட்டமாக துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் வலயக்கல்வி பணிமனை விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இன்று 2ம் கட்டமாக துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் தாய் தந்தையயை இழந்த பிள்ளைகள், பெண்தலமைத்துவக் குடும்பங்களின் பிள்ளைகள் என அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக சுமார் 158,000 ரூபா பெறுமதியான 8 துவிச்சக்கரவண்டிகளும் 60 புத்தகப்பைகள் மற்றும் 44 காலணிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் செயற்றிட்டத்திற்கு நிதி அனுசரனைகளினை 8 துவிச்சக்கர வண்டிகளுக்குமான சுமார் 80000 ரூபாவினை வட்டுக்கோட்டை சேர்நத புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த ஒர் கருணையுள்ளம் கொண்ட பெண்மணியும், 44 காலணிகளுக்குமான நிதியினை வட்டுக்கோட்டை சேர்நத புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிவராசா டினேஸ் 10000 ஷரூபாவும் மற்றும் வட்டுக்கோட்டை சேர்ந்த புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த ஒர் கருணையாளன் 35000ரூபாவும் மற்றும் 60 புத்தகபைகளுக்கான 33000ரூபா நிதியினை கொழும்பில் உள்ள ஒர்கல்வி சேவையாளரும் பிரபல ஆசிரியரும் வழங்கியுள்ளனார். இவ் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒளியேற்றி இவ் கருணையுள்ளங்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் சார்பிலும் மாணவர்களின் சார்பிலும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் துணுக்காய் கல்வி வலய பாடசாலை மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மற்றும் பெண் தலமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகள் என சுமார் 600க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் புத்தகபைகள் இல்லாது பொலித்தீன் பைகளில் கொப்பி புத்தகங்களை எடுத்து வருகின்றனார் இதனுடன் 800க்கு மேற்பட்ட பிள்ளைகள் காலணிகள் இல்லாது தற்போதைய கல்வி கட்டமைப்பலும் செருப்புடனும் மாணவர்கள் வருகின்ற அவலநிலைமை இன்றும் எமது சமூகங்களில் தொடர்ந்த வண்ணம் உள்ளது பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் பிள்ளைகளின் கல்விக்காக அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை எமது ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதுடன் இதற்கான தர்மீக பொறுப்பும் எமது தமிழ் சமூகங்களுக்கு இருக்கின்றது என்பதனை மறந்திட முடியாது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)