Header image alt text

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 28 January 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்

vellayanமட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில்லை பிறப்பிடமாகவும், புதூரை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் நாகமணி சிவராசா (வெள்ளையன்) அவர்கள் இன்று 28.01.2016 வியாழக்கிழமை முற்பகல் 11.30அளவில் மாரடைப்பினால் மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றிய தோழரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)

IMG_3850வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் நேற்று (27.01.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகி, கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு சு.காண்டீபன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு சமூக ஆர்வலர் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் அனுசரணை வழங்கியதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. Read more

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம்-(படங்கள் இணைப்பு)

gfgfgfgfgமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.வியாழேந்திரன் என்.சிறீநேசன், சி.யோகேஸ்வரன், என்.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இறந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உறவினர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் பல முனைகளிலிருந்தும் படையினர் முன்னேறிக் கொண்டிருந்தபோது ஐந்து விமானங்கள் தாக்குதல் நடாத்தியிருந்தது. இந்நிலையில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பகுதி இறால் பண்ணைக்கு சென்ற சிறுவர்கள் முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 82பேர் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததுடன், 28, 29, 30ஆம் திகதிகளில் அடுத்தடுத்ததாக பலர் படைத்தரப்பால் சுட்டுக்கொல்லப்பட்டு மொத்தம் 170ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-(படங்கள் இணைப்பு)-

wrerமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டு மாவட்டத்தில் 1,400ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதோடு, அவர்களை அரசாங்க சேவையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை மத்திய மற்றும் மாகாண அமைச்சுகள் மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பின்னர் பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரை எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் 2,700 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட் வருகின்றோம். எங்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது வயதெல்லையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், 35 வயதைத் தாண்டிய 50ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையின்றி உள்ளனர். Read more

காணாமல் போனோர் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது-

samanthaஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விடயங்களை அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதுவர் சமந்தா பவர் முன்வைத்துள்ளார். அண்மையில் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது தாம் அவதானித்த விடயங்களை அவர் முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாரிய அளவானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தாரை இலங்கையில் சந்திக்கக்கிடைத்து. அவர்கள் எவ்வாறு காணாமல்சென்றனர் என்பது குறித்த விபரங்களை அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முன்வைத்தனர். அதேநேரம் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், அதற்கு பதிலாக அவர்களுக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்குவது முறையானது என்றும் சமந்தாபவர் கூறியுள்ளார்.

கோட்டபாயவின் மனு விசாரணையிலிருந்து நீதவான் விலகல்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து நீதவான் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார். இன்று குறித்த மனு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , தனிப்பட்ட காரணத்திற்காக தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதவான் பிரியந்த ஜயவர்தன அறிவித்துள்ளார். காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் தம்மை கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை வெளியிடுமாறு கோரி கோட்டபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணைகனை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய நீதிபதி குழு நியமிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில் குறித்த குழுவில் இருந்து பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார். குறித்த மனுவின் விசாரணைகள் மே மாதம் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும்-அமைச்சர் ராஜித-

rajithaஎதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திரதின கொண்டாட்டத்தின் பாது, தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பாடப்படவுள்ளது. இதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இந்த இறுதித் தீர்மாத்தினை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு ஒரு சிலரின் எதிர்ப்பு வந்த போதிலும் இந்த யோசனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேசிய கீதத்தினை தமிழ் சிங்கள மொழியில் பாடப்படும் நடைமுறையை இந்த தேசிய தினத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளனர் என அமைச்சர்; ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more

ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்டகப்பட்டுள்ளது. கொழும்பு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்றுகாலை ஞானசார தேரர் சார்பில் பிணை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை வழங்க மறுத்துள்ளார். கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, நீதவானால் உத்தரவிடப்பட்டது. இதன்படி கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்-

fgயாழ். அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி முதல் ஏற்பட்டு வரும் நிலவெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நேற் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலவெடிப்பு இடம்பெற்ற தோட்டப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொதுமக்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும், 500 மீற்றர் தூரத்தையும் சுற்றி மஞ்சள் பட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு தொடர்பில் பணிப்பாளர் கூறியதாவது, ‘இங்கு நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். இது ஒரு சாதாரண நில வெடிப்பு ஆகும். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு மயோசின் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. யாழ்ப்பாணத்திலுள்ள நிலாவரை நீருற்று, வில்லூன்றி தீர்த்தக்கேணி, கெருடாவில் குகை என்பன பல மில்லியன் காலத்துக்கு முன்னர் ஏற்பட்ட பாறை மாற்றங்களால் ஏற்பட்டதாகும். நிலத்தின் கீழுள்ள சுண்ணாம்பு பாறையில் ஏற்பட்ட சிறு விரிசலாக இது இருக்கக்கூடும். இது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது, நிலத்தடி மண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, சரியான விடயம் தெளிவுபடுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் 40,000பேர் இறக்கவில்லை-மக்ஸ்வெல் பரணகம-

maxwel paranagamaஇறுதிக்கட்டப் போரின் இறுதி வாரங்களில், பொதுமக்கள் 40,000பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என ‘பரணகம’ ஆணைக்குழு எனப்படும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சனல்4 தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோவின் அண்மைய இலங்கை விஜயத்தின்போதும் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டதாக, மேற்படி காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கைச்சாத்திடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாகவும் கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என நம்பப்படுவது புனைவு என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை என்றும் போரின்போது, புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை என்றும் எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தவிர, விசேட விசாரணை அணியொன்றினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், போரின்போது காணாமல்போனதாகக் கூறப்படுவோரின் குடும்பங்களுக்கு தகவல்களை அளிக்கவுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கச்சதீவு விழாவில் பங்கேற்க தமிழகத்திலுள்ள இலங்கையர்க்கு அனுமதி மறுப்பு-

kachchative thiruvilaகச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வருகை தருவதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் வட்டாராச்சியார் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெிளியட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது சக்கத்தீவு செல்வதற்கு தமிழக விசைப்படகுகள் மறுப்பு தெரிவித்துள்ளமை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக திருவிழா ஏற்பாட்டாளர் இராமேஸ்வரம் பங்குத் தந்தை சகாயராஜ் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு திருவிழாவிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பங்குத்தந்தை கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தி அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு இராமேஸ்வர கோட்டாராச்சியார் ராம்தீபன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் 470 தமிழர்கள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்-

imagesகடந்த ஒரு வருட காலப்பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து 470 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மீள்குடியேற்றத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டு ஜனவரியில் தற்போது வரையான காலப்பகுதியில்வரையில் இந்த எண்ணிக்கையானவர்கள், நாடு திரும்பி இருக்கின்றனர்.

இறுதியாக கடந்த 26ம் திகதி 20 வது ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்பி இருந்தனர்.

அதேநேரம், தற்போது தமிழ் நாட்டில் உள்ள 109 அகதி முகாம்களில், 64 ஆயிரம் பேர் வரையில் அகதிகளாக தங்கியிருக்கின்றனர்.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவர்-பிரதமர்-

ranil (5)எதிர்வரும் மே மாதமளவில் யுத்த குற்றங்களுக்கான விசாரணை பொறிமுறை அமுலாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “செனல் போ” தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அண்மையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளக பொறிமுறைக்குள் அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் சர்வதேச நீதிபதிகளை தாங்கள் நிராகரிக்கவில்லை என குறிப்பிட்டார். அத்துடன் ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இந்த விடயத்தில் மக்களின் நன்மை கருதியே செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கணிப்பிட்டிருந்தமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் இறுதி யுத்தத்தில் பாதியளவான பொது மக்கள் பலியானமை உண்மையே. எனினும், நாற்பதாயிரம் பேர் இறந்தனரா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. இதனை அறிவதற்கு ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை, காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின தேசிய நிகழ்வில் பிரதமர் கூறியிருந்தார். Read more