திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் நேற்று (27.01.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகி, கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு சு.காண்டீபன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு சமூக ஆர்வலர் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் அனுசரணை வழங்கியதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.