மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-(படங்கள் இணைப்பு)-

wrerமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டு மாவட்டத்தில் 1,400ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதோடு, அவர்களை அரசாங்க சேவையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை மத்திய மற்றும் மாகாண அமைச்சுகள் மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பின்னர் பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரை எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் 2,700 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட் வருகின்றோம். எங்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது வயதெல்லையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், 35 வயதைத் தாண்டிய 50ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்பு கொடுப்பதாக கூறி இதுவரை கொடுக்கப்படவில்லை. அதேநேரம் 2012இல் பட்டப்படிப்பை நிறைவுசெய்த உயர் கணக்கியல் டிப்ளோமா மாணர்களுக்கும் வேலைவாய்ப்பு வழப்படவி;லை. இங்கு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர். அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.வியாழேந்திரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம். தொடர்ந்தும் பேசிவருகின்றோம் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரிடம் வேலையற்ற பட்டதாரிகள் மகஜரைக் கையளித்தனர்.20160128_104903 20160128_104926 20160128_105139 20160128_105931 20160128_105936

gfgfgf batti_gradute_003 batti_gradute_004 batti_gradute_005
fgfgfgfgf