காணாமல் போனோர் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது-

samanthaஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விடயங்களை அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதுவர் சமந்தா பவர் முன்வைத்துள்ளார். அண்மையில் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது தாம் அவதானித்த விடயங்களை அவர் முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாரிய அளவானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தாரை இலங்கையில் சந்திக்கக்கிடைத்து. அவர்கள் எவ்வாறு காணாமல்சென்றனர் என்பது குறித்த விபரங்களை அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முன்வைத்தனர். அதேநேரம் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், அதற்கு பதிலாக அவர்களுக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்குவது முறையானது என்றும் சமந்தாபவர் கூறியுள்ளார்.

கோட்டபாயவின் மனு விசாரணையிலிருந்து நீதவான் விலகல்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து நீதவான் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார். இன்று குறித்த மனு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , தனிப்பட்ட காரணத்திற்காக தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதவான் பிரியந்த ஜயவர்தன அறிவித்துள்ளார். காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் தம்மை கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை வெளியிடுமாறு கோரி கோட்டபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணைகனை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய நீதிபதி குழு நியமிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில் குறித்த குழுவில் இருந்து பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார். குறித்த மனுவின் விசாரணைகள் மே மாதம் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும்-அமைச்சர் ராஜித-

rajithaஎதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திரதின கொண்டாட்டத்தின் பாது, தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பாடப்படவுள்ளது. இதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இந்த இறுதித் தீர்மாத்தினை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு ஒரு சிலரின் எதிர்ப்பு வந்த போதிலும் இந்த யோசனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேசிய கீதத்தினை தமிழ் சிங்கள மொழியில் பாடப்படும் நடைமுறையை இந்த தேசிய தினத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளனர் என அமைச்சர்; ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் சிங்கள மொழிக்கும் சிங்கள பௌத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும் தமிழ் மக்களுக்கும் உள்ளன. தமிழ் பேசும் மக்களின் மொழியையும் மதித்து அவர்களின் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புகளின் ஒன்றாகும். அதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் சுதந்திர தின நாளிலிருந்து இலங்கையில் சகல அரசகரும நிகழ்வுகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிகழ்வுகளிலும் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இலங்கையின் தேசியகீதம் இயற்றப்பட வேண்டும். நாட்டில் நல்லாட்சிக்கான முக்கிய அடையாளத்தில் இது பிரதானமான ஒன்றாகும். சகல இன மக்களையும் பிரதிந்திதுவப்படுத்த இதுவே சரியான அடையாளமாகும். அதேபோல் தமிழ் மொழியில் தேசியகீதம் இயற்றப்படுவதை இனவாத செயற்பாடாக கருதும் ஒருசிலர் உள்ளனர். அவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.