Header image alt text

சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஸ்கொட்லாந்திற்கு விஜயம்-

D.Sithadthanஐக்கிய இராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று அதிகாலை ஸ்கொட்லாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் ஸ்கொட்லாந்து சென்றுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்று அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை ஸ்கொட்லாந்தில் விசேட கூட்டமொன்றிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றவுள்ளதோடு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யா.ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியும், புதிய கட்டிட திறப்பு விழாவும்-(படங்கள் இணைப்பு)

22.01.2016 skandavarodaya (3)யாழ். சுன்னாகம், கந்தரோடையில் அமைந்துள்ள ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியும், புதிய கட்டிடத் திறப்பு விழாவும் கடந்த 22.01.2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.வ.நந்தீஸ்வரன் அவர்களது தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஸகந்தவரோதயன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. செ.சந்திரராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்விவலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. ம.பிரிதிவிராஜா (ஸ்கந்தவரோதயன்) அவர்களும், துறைசார் விருந்தினராக திரு. சி.மகாலிங்கம் (ஸ்கந்தவரோதயன்) (ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர், உடற்கல்வி) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதையடுத்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புதிய கட்டிடத் தொகுதியினைத் திறந்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். Read more

கல்முனை பஸ்நிலைய கட்டிடத் தொகுதியில் சடலம் மீட்பு-

errerகல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூலித் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் பெரியகல்லாறு 3ஆம் பிரிவைச் சேர்ந்த தம்பிராஜா வரதராஜன் (வயது-44) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை நகரில் பழக்கடையொன்றில் தொழிலாளியாக வேலை செய்கின்ற இவர் கல்முனை பஸ்நிலையக் கட்டிடத் தொகுதியின் மேல் மாடியிலிருந்து கீழே வீழுந்திருக்கலாம் எனவும் அதனால் அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது தலையில் பெரியளவில் அடிபட்ட இரத்தக் காயம் காணப்படுகிறது எனவும் விசாரணைகள் மூலமே மேலதிக தகவல்களை அறியமுடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்க தீர்மானம்-

dfdfdஎதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஷ்கரிப்போம் என வட மாகாண, காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. அத்தோடு காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் கருத்துக்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போன உறவினர்களின் அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். “காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக, பிரதமர் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். அப்படி இறந்திருந்தால் இராணுவத்திடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்?. Read more