யா.ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியும், புதிய கட்டிட திறப்பு விழாவும்-(படங்கள் இணைப்பு)

22.01.2016 skandavarodaya (3)யாழ். சுன்னாகம், கந்தரோடையில் அமைந்துள்ள ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியும், புதிய கட்டிடத் திறப்பு விழாவும் கடந்த 22.01.2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.வ.நந்தீஸ்வரன் அவர்களது தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஸகந்தவரோதயன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. செ.சந்திரராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்விவலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. ம.பிரிதிவிராஜா (ஸ்கந்தவரோதயன்) அவர்களும், துறைசார் விருந்தினராக திரு. சி.மகாலிங்கம் (ஸ்கந்தவரோதயன்) (ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர், உடற்கல்வி) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதையடுத்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புதிய கட்டிடத் தொகுதியினைத் திறந்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். 22.01.2016 skandavarodaya (3)22.01.2016 skandavarodaya (1) 22.01.2016 skandavarodaya (2)
22.01.2016 skandavarodaya (5) 22.01.2016 skandavarodaya (6) 22.01.2016 skandavarodaya (7) 22.01.2016 skandavarodaya (8)

22.01.2016 skandavarodaya (11)