சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக வவுனியா இளைஞன் ஸ்ரீ.கேசவன்-
சார்ஜாவின் 7வது சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாசி மாதம் 01ம் திகதி முதல் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது. மேற்படி ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்று வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக பங்குபெறும் சாரணன் ஸ்ரீகரன் கேசவன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் என்பதுடன் 2013ம் ஆண்டு சிரேஷ்ட மாணவத் தலைவனாக செயலாற்றியதுடன்
2012ம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளதுடன் தொடர்ந்து சாரணர் வளர்ச்சியில் அரும்பாடுபடும் ஓர் இளைஞன் என்பதுடன் வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் சமூக சேவையாற்றி வருகின்றார்.
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதிய மடிக்கணனி அன்பளிப்பு-
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பிரிவு மாணவி செல்வி நே.பத்மலதா அவர்களுக்கு இம் மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இவரது சகோதரன் 2007ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது காணாமல் போயுள்ளார். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் மேற்படி மாணவி விடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தற்பரானந்தன் சுகந்தன் ((KFC Manager Jaffna) என்பவரால் அன்பளிப்பு செய்யபட்டு
இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை காரியாலத்தில் வைத்து வட்டுக்கோட்டை இலங்கை வங்கி கிளை உத்தியோகத்தர் மோ.மைதிலி அவர்களால் கையளிக்கபட்டது. எமது வேண்டுகோளை ஏற்று மடிக்கணனியை அன்பளிப்பு செய்த த.சுகந்தன் அவர்களுற்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)