Header image alt text

யோசித்த ராஜபக்ச கடற்படையிலிருந்து இடைநிறுத்தம்-

yosithaஇலங்கை கடற்படையில் இருந்து யோசித்த ராஜபக்ஷ தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, பெப்ரவரி 28ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான இவர், அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியின்றி யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி முறை தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும்-தமிழ் மக்கள் பேரவை-

peravaiஇலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பேரவையின் வல்லுநர் குழுவின் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றபோதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதற்கான திட்ட வரைவொன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்து, அதனைப் பொதுமக்கள் மத்தியில் வைத்திருக்கின்றது என இக் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கிடையில் குறைபாடுகள் நிறைந்ததொரு 13ஆவது அரசியல் திருத்தத்தையே இந்தியா அளித்தது என சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், குறைகளற்ற வகையில் சமஸ்டி முறையிலானதோர் அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பொது செயலாளரின் விஜயம்-

ICRCசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது செயலாளர் எல்ஹாஜ் எஸ் சீ, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புகளை கண்காணிப்பது அவரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது செயலாளர் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு இடையில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

etrtrtஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகள் மூலம் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. வடமாகாண மீனவ கூட்டமைப்பு, வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் ஊர்வலம், யாழ். இந்திய துணைத்தூதரகம் வரை சென்று அங்கு ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஏ.நடராஜனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ‘வடக்கு கடற்பரப்பு எல்லை மீறலை உடனே தடுத்து நிறுத்து, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல்வளத்தை அழித்து மீன்பிடிக்கும் இந்திய இழுவைப்படகுகளை நிறுத்து’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு, கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவு கிணற்றை சோதனை செய்யுமாறு கோரிக்கை-

mandaitivuமண்டைதீவில் மூடப்பட்டுள்ள மூன்று கிணறுகளை தோண்டினால், தீவகத்தில் காணாமல் போன பலரின் மனித உடல்கள் வெளிவரும் என அதே பிரதேசத்தைச் சேர்ந்த வே.பேரின்பநாயகம் என்பவர் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார். தீவகப் பகுதியில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல்போனவர்கள், இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவில் உள்ள 3 கிணறுகளில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த 3 கிணறுகளையும் சோதனை செய்யுங்கள். ஒருவேளை காணாமல்போனவர்கள் பலர் கொல்லப்பட்டு அதற்குள் போடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அத்துடன் மூன்று கிணற்றில் ஒரு கிணற்றை தோண்டிய போதும் மற்றைய கிணறுகள் எவையும் தோண்டப்படவில்லை. இதனால் அவற்றை தோண்டினால் பல உன்மைகள் தெரியவரும் என அவர் தனது சாட்சியத்தின்போது வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மன்னாரில் பேரணி-

mannarபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று காலை மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றுள்ளது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி குருசாந்தன் மஹாலட்சுமி தலைமையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் ஒன்று கூடிய பெண்கள், பிரமுகர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரமாறும் வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்தும் குறித்த கண்டன பேரணி இடம்பெற்றது. இதன்போது பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. Read more

சமஸ்டி தீர்வுக்கு ராஜீவ் காந்தி உடன்படவில்லை-வரதராஜப் பெருமாள்-

varatharஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984- 1989ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் சமஸ்டி தீர்வு ஒன்றை இலங்கையிடம் கோருவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துதில் அவர் அக்கறை காட்டவில்லை என்றும் பெருமாள் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கையில் சமஸ்டி தீர்வை கோராது எனினும் தமிழர்கள் விரும்பும் யோசனைகளை அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கமுடியும். ராஜீவ் காந்தி சமஸ்டியை வலியுறுத்தாமைக்கு அப்போது பஞ்சாப்பில் சுயாட்சி போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையே காரணமாகும். 13வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா வலியுறுத்தல்களை கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக மாகாணசபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. அத்துடன் 2006ஆம் ஆண்டில் வடக்குகிழக்கை எதிர்ப்பின்றி பிரிப்பதற்கும் வழிவகுக்கப்பட்டது. Read more

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை-த.சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthanநல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டதன் பின்னர் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கவேண்டும், அல்லது புனர்வாழ்வளிக்கவேண்டும். ஆனால் எவ்வித முடிவும் இன்றி தடுத்துவைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுகுறித்து, சட்டமா அதிபருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமன்றி, காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் அரசாங்கத்திடம் கலந்துரையாடப்பட்டு வருகிறது. எனினும் இவற்றிற்கு இன்னும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா-2016 – (படங்கள் இணைப்பு)

20160228_152329கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தமிழ் விழா-2016 (சங்கமம் நிகழ்வானது) கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று (28.02.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிரதிநிதியாக கௌரவ அமைச்சர் சரத் அமுனுகம அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகிகளின் உரைகள் இடம்பெற்றதையடுத்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 

அத்துடன் இந்த விழாவிற்கு தமிழகத்திலிருந்து பட்டிமன்றப் புகழ் ராஜா அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததோடு, ராஜா அவர்களை நடுவராகக் கொண்டு ஆறு பேச்சாளர்களுடன் “சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே – சுகமே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்று சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே என நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டது. Read more

அரசியல் கைதிகள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு தவறானது-சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthan M.P,.இலங்கையில் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்த வரலாறு உள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அரசியல் கைதிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகவேண்டுமெனக் கூறியதனை அரசாங்கம் முன்னிறுத்திப் பேசுவது தவறாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மகஸீன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தின்போது அரசியல் கைதிகள் சட்டரீதியாகக் கையாளப்பட வேண்டுமெனக் கூறியமை தொடர்பாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றை முன்னிறுத்தி அரசாங்கம் பேசுவது மிகப்பெரிய தவறாகும்.

மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டம் தொடர்பில் பேசுகின்றார். இலங்கையில் 1981 மற்றும் 1989 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more

கொழும்பில் உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

27.02.2016 colombo ATT office (7)சிங்கப்பூரைத் தலைமையகமாக கொண்டு இந்தியா, வியட்னாம், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் ATT  SYSTEMS (advanced Technology Training Systems Institute) உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் தனது தளத்தினை இன்று (27.02.2016) இலங்கையிலும் ஸ்தாபித்துள்ளது. இலங்கை மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதோடு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். இலக்கம் 16, ஹேக்வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு-04 என்ற முகவரியில் அமைந்துள்ள மேற்படி நிறுவனத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு நிறுவனத்தினைத் திறந்துவைத்தார். சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்க முகாமையாளர் திரு. ஆர்.சுமன்ஜன், நிறுவனத்தின் இலங்கைக்கான இயக்குநர் திரு. எஸ்.சுகிர்தன், நிறுவனத்தின் இலங்கைக்கான செயலாளர் எஸ்.சுதர்மன், பொறியியலாளர் எஸ்.சஞ்ஜீவ் ஆகியோரும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் மேற்படி நிறுவனத் திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.     http://www.attsystemsgroup.com  Read more

மீள்குடியேற்றம் குறித்து அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சு-

tna (4)சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வாழ்வாதாரம், ஏனைய கருத்திட்டங்கள், கைத்தொழில் அபிவிருத்தி உள்ளடங்களான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் 7846 குடும்பங்களுக்கு வீட்டு வசதியின்மை-

indian schemeமட்டக்களப்பு மாவட்டத்தில் 7,846 குடும்பங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸின் முயற்சியில் இவ்வாண்டு யுன் ஹபிடாட் நிறுவனத்தின் மூலம் 800 வீடுகளும் மீள்குடியேற்ற அமைச்சு ஊடாக 1,000 வீடுகளும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளின்றி உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளும் குடும்பங்களின் எண்ணிக்கையும் கோறளைப்பற்று வடக்கு – 234, கோறளைப்பற்று மத்திய – 296, கோறளைப்பற்று மேற்கு – 39, கோறளைப்பற்று – 309, கோறளைப்பற்று தெற்கு – 840, ஏறாவூர்ப்பற்று – 964, ஏறாவூர் நகர் – 120, மண்முனை மேற்கு – 1,040, மண்முணை வடக்கு – 475, காத்தான்குடி – 59, மண்முனைப்பற்று – 101, மண்முனை தென்மேற்கு – 930, போரதீவுப்பற்று – 2,329, மண்முனை தென்எருவில்பற்று – 110 என்றாவாறு வீடற்ற குடும்பங்களின் எண்ணிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பதவிகளுக்கு விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானம்-

policeபொலிஸ் சேவைகளில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் சேவையில் 3276 பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். அதன்படி பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் 521 வெற்றிடங்களும், பெண் பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் 52 வெற்றிடங்களும், பொலிஸ் சார்ஜென்ட் பதவிகளில் 1861 வெற்றிடங்களும், பெண் பொலிஸ் சார்ஜென்ட் பதவிகளில் 567 வெற்றிடங்களும், பொலிஸ் சார்ஜென்ட் சாரதி பதவிகளில் 275 வெற்றிடங்களும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற அதிகாரிகளின் அளவுப்படி அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015 டிசம்பர் 26ம் திகதி சேவை காலத்தை நிறைவு செய்த அதிகாரிகளிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். பொலிஸ் சேவையில் அனைத்து பதவிகளிலும் நிரந்தர பதவி உயர்வு வழங்கும் நடைமுறை தயாரிக்கப்பட்டு அது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்காக பொலிஸ் மா அதிபரினால், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சிடம் வழங்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தேசிய கீதம் பாடியதை எதிர்த்து வழக்குத் தாக்கல்-

srilankaசுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்ளயை சேர்ந்த சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையைச் சேர்ந்த பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனிப் பகுதியைச் சேர்ந்த தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்-

ertrtவெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களின் வருகையின் காரணத்தினால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, புல்மோட்டை மீனவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வெளி மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி சுமார் 400 மீனவர்கள் தங்களின் படகுகளை வீதியோரத்தில் நிறுத்தி இன்றுகாலை தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

புல்மோட்டை கிராமிய ஐக்கிய மீனவர் சமாசம், கரைவலை மீனவர் சங்கம், 2ஆம் வட்டார மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் பொன்மலைக்குடா மீனவர் சங்கம் என்பன இணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பா.உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு

yiuyi (7)கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 14 கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டிருந்தார். Read more

போராடி நிலத்தை மீட்போம் என வலி.வடக்கு மக்கள் உறுதி 

vali_CIஎமது நிலத்திற்காக  போராட போகின்றோம். வன்முறை சார் போராட்டமாக போராடாமல், அஹிம்சை ரீதியாக போராடி எமது நிலத்தை மீட்போம் என வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 38 நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை சபாபதிப்பிள்ளை முகாமில் ஒன்று கூடி கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முடிவில் முகாமினுள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் போது , Read more