தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வழங்கும் மேற்படி நிகழ்வு,
கழகத்தின் அறிவொளி இல்லத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
வவுனியா சிதம்பரபுரம் அகதி முகாமைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இவ் செயற்றிட்டத்தில் கழகத்தின்
அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு கோபி மோகன், கழகத்தின் உறுப்பினர் திரு எஸ்.சுகந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.